‛விக்ரம்' பட முதல் பாடல் வெளியீடு : மத்திய அரசை ‛அட்டாக்' செய்யும் கமல்?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் விக்ரம். இதில் இவருடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கமல்ஹாசன் எழுதி, பாடியுள்ள ‛பத்தல பத்தல' என்ற பாடலை வெளியிட்டுள்ளனர். தர லோக்கலாக இந்த பாடலை எழுதி, பாடி உள்ளார் கமல். குறிப்பாக மத்திய அரசை விமர்சிக்கும் விதமான வரிகள் இடம் பெற்றுள்ளன.
‛‛கஜானாலே காசில்லே, கல்லாலையும் காசில்லே, காய்ச்சல் ஜுரம் நிறைய வருது. தில்லாலங்கடி தில்லாலே, ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே. சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே என்ற வரிகளும் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து மத்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டுள்ள கமலஹாசன், தமிழ்நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை. சாவி இப்போது திருடன் கையில் என்று மத்திய அரசை மறைமுகமாக தாக்கி இருக்கிறார் என்பது போன்ற விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் எழுந்து வருகிறது.
|
அதேசமயம் அனிருத் இசையில் முதன்முதலாக கமல்ஹாசன் பாடியுள்ள இந்த பாடல் மிக துள்ளலாக இளவட்ட ரசிகர்களை குஷிப்படுத்தும் குத்துப்பாடலாக வெளியாகியுள்ளது. கேங்குடன் கமல் ஆடிப் பாடுவது போல் அமைந்துள்ள இப்பாடல் வெளியாகி சில மணி நேரங்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. இந்தப் படம் ஜூன் 3-ஆம் தேதி திரைக்கு வருகிறது.