அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமிக்கப்படாமையால் நாடு முழுவதும் செயலிழந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அமைச்சுக்களின் செயலாளர்களை நியமிப்பதற்கு ,பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிக்க வேண்டும். பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிக்கத் தேவையானவர்கள் தொடர்பில், பாரளுமன்ற உறுப்பினர்கள் விரைவாக கலந்துரையாடி தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எந்தவொரு கட்சியும் பிரதமர் பதவிக்காக ஒருவரின் பெயரை குறிப்பிடாத பட்சத்தில், பிரதமர் பதவிக்கு ஒருவரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்