விரைவில் எம்பி எலக்ஷன்… தேதி குறித்த தேர்தல் ஆணையம்!

நாடாளுமன்ற மக்களவை (லோக்சபா) எம்பிக்களுக்கு நேரடியாகவோ, மாநிலங்களவை (ராஜ்யசபா) எம்பி பதவிகளுக்கு அந்தந்த மாநிலங்களின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் மூலம் மறைமுகமாகவும் தேர்தல் நடத்தப்படுகிறது. இவர்களில் மக்களவை எம்பிக்களின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாகவும், மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக் காலம் ஆறு ஆண்டுகளாகவும் உள்ளது.

நாடாளுமன்ற மக்களவைக்கு 2024 இல் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களுக்கான ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக் காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனையடு்தது இந்த பதவிக்கு புதிய எம்பிக்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதியை
இந்திய தேர்தல் ஆணையம்
அறிவித்துள்ளது.

இதன்படி தமிழகம், கர்நாடகம், தெலங்கானா உள்பட 15 மாநிலங்களில் மொத்தம் காலியாக உள்ள 57 எம்பி இடங்களுக்கு ஜுன் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் திமுகவை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், ராஜேஷ்குமார், அதிமுகவை சேர்ந்த நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் என மொத்தம் ஆறு எம்பிக்களின் பதவிக் காலம் ஜூன் 29 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

தற்போது
திமுக
ஆளுங்கட்சியாக இருப்பதால் எம்எல்ஏக்கள் பலத்தின் அடிப்படையில் அக்கட்சிக்கு நான்கு எம்பிக்களும், எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு இரண்டு எம்பிக்களும் நியமிக்கப்பட உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.