வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன் டிசி: கூகுள் பிக்ஸல் ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் அமெரிக்காவில் வரும் ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் சிறப்பம்சங்கள் குறித்துப் பார்ப்போம்.
விஞ்ஞான வளர்ச்சியில் நமது கைகளில் அன்றாடும் தவழும் ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டன. நமது அன்றாட அலுவலகப் பணி முதல் பொழுது போக்கு, தகவல்களை அறிதல், கருத்துப் பரிமாற்றம், சமூக வலைதள பயன்பாடு, பணப்பரிவர்த்தனை, உடற்பயிற்சி கண்காணிப்பு என பலவற்றுக்கு ஸ்மார்ட்போன்கள் பயன்படுகின்றன.
ஸ்மார்ட்போன்கள் உடன் ஸ்மார்ட் ஆக்ஸசரிக்களும் பிரபலமாகத் துவங்கிவிட்டன. இயர் போன்கள் பயன்படுத்திய காலம் போய் ப்ளூடூத் ஹெட்செட், காதில் அடக்கமாக பொருந்தும்
ஆர் பாடுகள் பயன்பாட்டுக்கு வரத் துவங்கின. கார்கள் ஓட்டும்போது, காலை ஜாகிங் செல்லும் போது இந்த ஆர்பாடுகளில் இசை கேட்டபடி செல்லுதல் நமது வழக்கமாகிவிட்டது.
ஒரு நாளில் பல மணி நேரம் செல்போன் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் அவற்றை ஒரு ஓரமாக வைத்துவிட்டு ஆர்பாட்கள் மூலம் அழைப்புகளை இணைத்துப் பேசி வந்தனர். இந்த வேலையை இன்னும் சுலபமாக்க ஸ்மார்ட் வாட்ச் கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
ஆப்பிள் முதல் சாம்சங்வரை பல செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட் போனுடன் ஸ்மார்ட் வாட்ச் களையும் அவ்வப்போது அறிமுகப்படுத்தின. இந்தியாவில் 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் இளைஞர்கள் மத்தியில் புகழ் பெறத் துவங்கியது.
நடுத்தர வர்க்கத்தை ஈர்க்க சீன ஸ்மார்ட் வாட்சுகளும் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப் பட்டன. இவற்றின்மூலம் வாகனம் ஓட்டியபடி செல்போனில் செய்யும் அனைத்து வேலைகளையும் செய்ய முடியும்.
குறுஞ்செய்திகளை பார்ப்பது, அழைப்புகளை ஏற்பது, துண்டிப்பது, பிலேலிஸ்ட்டை மாற்றி அமைப்பது, பிடித்த பாடல்களை தேர்வு செய்வது உள்ளிட்ட பலவற்றுக்கு ஸ்மார்ட் வாட்ச் உதவுகின்றன. கூகுள் நிறுவனம் தற்போது இந்த ஸ்மார்ட் வாட்ச் சந்தையில் அடி எடுத்து வைத்துள்ளது. விரைவில் அமெரிக்காவில் பிக்ஸல் பட்ஸ் ப்ரோ என்கிற ஸ்மார்ட் வாட்ச் கூகுள் அறிமுகப்படுத்துகிறது.
இதனையடுத்து இந்திய சந்தைக்குள் இந்த ஸ்மார்ட் வாட்ச் விரைவில் விற்பனைக்கு வெளியிடப்படும் என கூறப்படுகிறது. 15 ஆயிரத்து 400 ரூபாய் அல்லது அதற்குமேல் இதன் விலை நிர்ணயிக்கப்படும் வாய்ப்புள்ளது. சார்கோல், கோரல், சாக், லெமன்கிளாஸ் என நான்கு வண்ணங்களில் இந்த ஸ்மார்ட் வாட்ச் வெளியிடப்படுகிறது.
வரும் ஜூலை 21ஆம் தேதிமுதல் அமெரிக்காவில் இந்த ஸ்மார்ட் வாட்ச் ஆன்லைன் முன்பதிவு துவங்குகிறது. வியர் இயங்குதளத்தில் செயல்படும் இந்த ஸ்மார்ட் வாட்ச் வட்ட வடிவம் கொண்டது. உறுதியான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு உருவாக்கப்பட்டது.
இந்த ஸ்மார்ட் வாட்ச் இன் பட்டைகளை மாற்றி கொள்ளும் வசதியும் உள்ளது. கூகுள் அசிஸ்டன்ட், கூகுள் மேப், கூகுள் வாலட் உள்ளிட்ட பல்வேறு கூகுள் செயலிகளுடன் இந்த ஸ்மார்ட் வாட்ச் வாட்ச்-ஐ இணைத்துக்கொள்ளலாம். வீட்டிலுள்ள ஆண்ட்ராய்டு டிவி, ஹோம் தியேட்டர், மடிக்கணினி உள்ளிட்ட ஸ்மார்ட் இயந்திரங்களுடன் இந்த கூகுள் ஸ்மார்ட் வாட்ச்சை பேர் செய்து கொள்ளலாம். அனைத்து ஸ்மார்ட் வாட்ச்களிலும் உள்ள ஜாகிங் பிரியர்களுக்கான பிரத்தியேகமான இதயத்துடிப்பு மற்றும் தூக்கத்தை கணிக்கும் சென்சார்களும் இதில் உள்ளன.
மெஷின் லேர்னிங் தொழில்நுட்பம் இந்த ஸ்மார்ட் வாட்ச் இல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக சாலை நெரிசலில் நமது கார் சிக்கிக் கொள்ளும்போது அதற்கு ஏற்ப ஸ்மார்ட் வாட்ச் இன் இயங்கும் தன்மை மாறுபடும். மேலும் அதிநவீன வாய்ஸ் கன்சல்லேஷன் பில்டர் இதில் பயன்படுத்தப்படுகிறது.
இதனால் பயனாளர் கேட்கும் பாடலின் ஒலித் துல்லியம் அதிகரிக்கும். ஸ்மார்ட் போன் தொலைந்துவிட்டால் அதனை கண்டுபிடிக்க ஃபைண்ட் மை டிவைஸ் ஆப்ஷனும் இதில் உள்ளது. புதிதாக ஒரு இடத்திற்கு காரில் செல்லும்போது மேப் குரல் வழிகாட்டி இந்த ஸ்மார்ட் வாட்ச் மூலமாக துல்லியமாக வழிகாட்டும்.
மணிக்கட்டு வியர்வை மூலம் ஸ்மார்ட் வாட்ச் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் வாட்ச்-ஐ ஐந்து நிமிடம் சார்ஜ் செய்தால் ஒரு மணி நேரம் பாட்டரி நிற்கும் என கூகுள் தரப்பு கூறுகிறது. ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் முப்பத்தி ஒரு மணி நேரம் செயல்படும்.
Advertisement