வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: விலைவாசி உயர்வால் கவலை அடைந்துள்ள, 80 சதவீதம் பேர் அதிகம் சேமிக்க விரும்புவது ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
‘எர்னஸ்ட் அண்டு யங்’ நிறுவனம், பிப்ரவரியில் இந்தியாவில் 1,000 பேரிடம் ஆய்வு நடத்தி நுகர்வோர் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:ஆய்வில், 77 சதவீதம் பேர் அடுத்த ஓராண்டில் நிதிநிலையில் முன்னேற்றம் ஏற்படும் என, நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்து உலக மக்களிடம், 48 சதவீதம் என்ற அளவிற்கே உள்ளது. சரக்குகள், சேவைகள் ஆகியவற்றின் விலை உயர்ந்து வருவதால், பொருட்கள் வாங்குவதை தள்ளி வைக்கும் நிலைக்கு ஆளாவதாக, 64 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இதே கருத்தை தென்னாப்பிரிக்கா, பிரேசில், சீனா ஆகிய நாடுகளில் முறையே, 77, 63, 42 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
குறைந்த வருவாய் பிரிவினரில், 72 சதவீதம் பேர் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, நடுத்தர வருவாய் மற்றும் உயர் வருவாய் பிரிவுகளில் முறையே, 58, 60 சதவீதமாக உள்ளது.
வாழ்க்கை செலவினம் உயர்ந்து வருவதால், 80 சதவீதம் பேர், வரும் காலங்களில் அதிகமாக சேமிக்க விரும்புவது ஆய்வில் தெரியவந்துள்ளது. 54 சதவீதம் பேர் உடல்நலனிலும், 78 சதவீதம் பேர் மனநலனிலும் அக்கறை செலுத்துகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement