புது டெல்லி:
கடந்த 2020- ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா அலை பரவத் தொடங்கியது. கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாம் அலையில் லட்சக்கணக்கில் மக்கள் உயிரிழந்தனர்.
கொரோனா பரவலை தடுக்க இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் கொரோனாவின் உருமாறிய வைரஸ்களை தடுக்க பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை 2-வது டோஸ் தடுப்பூசிக்கு பின் 9 மாத கால இடைவெளிக்கு பிறகு தான் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் வெளிநாடு செல்பவர்கள் அந்தந்த நாட்டின் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் பூஸ்டர் டோஸை செலுத்திக் கொள்ளலாம் என்று தேசிய தொழிநுட்ப ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.
இந்த வசதியானது கூடிய விரைவில் கோவின் போர்டலில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வெளிநாடு செல்பவர்களுக்காக கொரோனா இரண்டாவது தவணை மற்றும் பூஸ்டர் டோசுக்கு இடைப்பட்ட ஒன்பது மாத கால இடைவெளியை மூன்று மாதமாக மத்திய அரசு குறைத்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், மத்திய சுகாதார அமைச்சகம் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடவில்லை.