மனதை திகைக்கச் செய்யும் பல உருவங்களைக் கொண்ட படங்கள் மூளைக்கும் பார்வைக்கும் வேலை அளிக்கக்கூடியவை. 150 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அமெரிக்க நிறுவனம் அச்சிட்ட இந்த படத்தில் 15 மிருகங்கள் – மனித முகங்கள் இருக்கிறது. இந்த படத்தைப் பார்த்து நீங்கள் எத்தனை கண்டுபிடிக்கிறீர்கள் என்று பார்ப்போம்.
சமீப காலங்களாக, ஆப்டிகல் இலுஸியன் என்கிற மனதை மருளச் செய்யும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்படுகின்றன. அவை பார்ப்பவர்களின் மூளைக்கும் பார்வைக்கும் விருந்தளிப்பவையாகவும் வேலை அளிப்பதாகவும் இருக்கின்றன.
அந்த வகையில், 150 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அமெரிக்க நிறுவனம் அச்சிட்ட ஒரு ஆப்டிகள் இலுசியன் படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தைப் பகிர்ந்து இதில் எத்தனை மிருகங்கள் மனித முகங்கள் இருக்கு கண்டுபிடியுங்கள் என்று சவால் விட்டு வருகின்றனர்.
இங்கே நீங்கள் பார்க்கின்ற இந்த ஆப்டிகல் இலுசியன் படம் 1872 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் அச்சக நிறுவனமான கரியர் மற்றும் ஐவ்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால், ஒரு நரி மரத்தில் ஏறுவது போன்றும், மரங்களில் மனித முகங்கள் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் மரத்தில் உள்ள பறவைகள் நரி மரத்தில் ஏறி தாவுவதை பார்ப்பதாகவும் அமைந்துள்ளன.
150 ஆண்டு பழமையான இந்த ஆப்டிகல் இலுசியன் படத்தில், 15 மிருகங்கள் – மனித முகங்கள் இருக்கின்றன. ஆனால், இந்தப் படத்தின் வனக் காட்சியைப் பார்க்கும் நீங்கள் இதில் எத்தனை மிருகங்கள், எத்தனை மனித முகங்கள் இருக்கின்றன என்று கண்டுபித்து கூறுங்கள்.
உண்மையிலேயே இது உங்கள் மூளைக்கும் பார்வைக்கும் வேலை கொடுக்கக்கூடிய ஒரு சவாலான ஆப்டிகல் இலுசியன் படம்தான். இந்த படத்தில் நீங்கள் எத்தனை மிருகங்கள் – மனித முகங்கள் கண்டுபிடித்துள்ளீர்கள் என்று கூறுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“