2 நாட்களுக்குள்., இலங்கையை யாராலும் காப்பாற்ற முடியாது! மத்திய வங்கி எச்சரிக்கை


2 நாட்களுக்குள் அரசாங்கம் அமைக்கப்படவில்லை என்றால் பொருளாதாரம் வீழ்ச்சியடையும், அதன்பிறகு இலங்கையை யாராலும் காப்பாற்ற முடியாது என்று இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க இரண்டு நாட்களுக்குள் புதிய அரசாங்கம் நியமிக்கப்படாவிட்டால், இலங்கையின் பொருளாதாரம் “மீட்க முடியாத அளவிற்கு வீழ்ச்சியடையும்” என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

இலங்கையில் சமீபத்திய கும்பல் வன்முறை அலையானது வங்கியின் மீட்புத் திட்டங்களைத் தடம் புரளச்செய்தது என்றும், திங்களன்று பிரதமர் ராஜினாமா செய்திருப்பதும், மாற்றீடு இல்லாததும் விடயங்களை மேலும் சிக்கலாக்குவதாகவும் அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்: “விமானத்தை எப்படி ஓட்டுவது?” நடுவானில் மயங்கிய விமானி., அடுத்து நடந்த ஆச்சரிய சம்பவம்! வைரலாகும் வீடியோ 

2 நாட்களுக்குள்., இலங்கையை யாராலும் காப்பாற்ற முடியாது! மத்திய வங்கி எச்சரிக்கை

நாட்டின் கடன் நெருக்கடி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான அந்நியச் செலாவணியின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நோக்கில் பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை மீட்டெடுப்பது மிகவும் அவசியம் என்று அவர் கூறினார்.

இன்னும் இரண்டு நாட்களில் அரசாங்கம் இல்லை என்றால் பொருளாதாரம் முற்றிலும் வீழ்ச்சியடையும், யாராலும் காப்பாற்ற முடியாது.

இதையும் படியுங்கள்: மகிந்த ராஜபக்ச எங்கே இருக்கிறார்? உண்மையை உடைத்த இலங்கை பாதுகாப்பு செயலாளர் 

2 நாட்களுக்குள்., இலங்கையை யாராலும் காப்பாற்ற முடியாது! மத்திய வங்கி எச்சரிக்கை

“ஒரு மாதத்திற்கு முன்பு நான் பொறுப்பேற்றபோது நாடு வேகமாக சரிந்து கொண்டிருந்தது. எங்களால் பிரேக்குகளைப் பயன்படுத்த முடியும் என்று நினைத்தேன், ஆனால் திங்கட்கிழமை நடந்த நிகழ்வுகளால் பிரேக்குகள் வேலை செய்யாது” என்று அவர் கூறினார்.


இதையும் படியுங்கள்: ஒரு வருடத்தில் பேரக்குழந்தை., இல்லனா ரூ.5 கோடி.., மகன், மருமகள் மீது பெற்றோர் வழக்கு!

இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடையும். அந்த நிலையில் இலங்கையை யாராலும் காப்பாற்ற முடியாது. நான் இங்கு ஆளுநராக இருப்பது உதவாது… உடனடியாக ஆட்சி அமைக்க நடவடிக்கை இல்லாவிட்டால் நான் பதவி விலகுவேன்” என்று அவர் கூறினார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.