Tamil News Today Live: அசானி புயல் கரையைக் கடந்தது

Tamil Nadu News Updates: அசானி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்து நேற்றிரவு மச்சிபட்டினம், நார்சாபூர் இடையே கரையைக் கடந்தது. வடகிழக்கு மாநிலங்களில் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து இருப்பதால், வரும் 15 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல்

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் தொடர்ந்து 36வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ110.85-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ100.94-க்கும் விற்பனை

திராக் வெள்ளை நிற வைரம் ஏலம்

உலகின் மிகப்பெரிய 228.31 காரட் எடையுள்ள தி ராக் என்ற வெள்ளை நிற வைரம் ஏலம்.169 கோடி ரூபாய்க்கு ஏலம் போனதாக சுவிஸ் ஏல நிறுவனம் அறிவிப்பு

இலங்கை மக்களுக்கு விசிக நிதியுதவி

இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில், விசிக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஒரு மாத ஊதியம் ரூ10 லட்சத்திற்கான காசோலையை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்

ஐபிஎல்: டெல்லி அணி வெற்றி

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி. 161 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி 18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு இலக்கை அடைந்து வெற்றி

Live Updates
09:41 (IST) 12 May 2022
கடந்த 24 மணி நேரத்தில் 2,827 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,827 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 24 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, கொரோனாவுக்கு 19,067 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

09:32 (IST) 12 May 2022
ஒரே ஒருவருக்கு கொரோனா – வடகொரியாவில் முழுஊரடங்கு

வடகொரியா நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக, வடகொரியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எல்லையை கண்காணிக்க அதிபர் உத்தரவு

09:17 (IST) 12 May 2022
சிதம்பரம் கோயிலில் விசாரணை நடத்த தீட்சிதர்கள் எதிர்ப்பு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த அனுமதி மறுத்தவர்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். துணை ஆணையர் தலைமையிலான குழு விசாரணை நடத்த சென்றபோது தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை.

09:12 (IST) 12 May 2022
தேர்வை ஒத்திவைக்க இந்திய மருத்துவ சங்கம் கடிதம்

மே 21ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் முதுகலை தேர்வை ஒத்திவைத்திட வேண்டும். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம்

08:56 (IST) 12 May 2022
பெட்ரோல் குண்டு வீச்சு – 4 பேர் கைது

கடலூர் அருகே போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 4 பேர் கைது. பெரியகுப்பம் பகுதியில் இயங்காத எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் கொள்ளையர்களை பிடிக்க சென்ற போது தாக்குதல் நடைபெற்றது.

08:32 (IST) 12 May 2022
திபெத் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்தது!

சீனா சாங்சிங் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட திபெத் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்தது. விமானம் புறப்பட்ட போது ஓடு பாதையில் இருந்து விலகியதால் தீப்பிடித்ததாக தகவல். விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

08:08 (IST) 12 May 2022
இலங்கை ஊரடங்கில் தளர்வு

இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வு. காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தளர்வு. தொடர்ந்து, பிற்பகல் 2 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு மீண்டும் அமலாகும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.