அசாம் மாநிலம் குவகாத்தியில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான 16 கிலோ தங்க கட்டிகளை வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
திமாபூர் – குவகாத்தி தேசிய நெடுஞ்சாலையில் 2 ஆயில் டேங்கர் லாரிகள் உள்பட 3 லாரிகளை மடக்கி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட போது, அதனுள் 96 தங்க கட்டிகளை பல்வேறு இடங்களில் மறைத்து கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
மியான்மார், வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு அதிக அளவில் தங்கம் கடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.