அமலாக்கத் துறை சோதனை: ரூ.88.30 லட்சம் பறிமுதல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி : சர்வதேச அமைப்பு வெளியிட்ட ஊழல் செய்தோர் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர் வீடு, அலுவலகங்களில், அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி, 88.30 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் இயங்கும், ‘மொசாக் பொன்சேகா’ என்ற சட்ட நிறுவனம், சர்வதேச அளவில் ஊழல்வாதிகளை அம்பலப்படுத்தி வருகிறது. இந்நிறுவனம் வெளியிட்ட பட்டியலில், தொழில் அதிபர் சஞ்சய் விஜய் ஷிண்டே என்பவர் பெயர் இடம்பெற்றிருந்தது.

latest tamil news

இதையடுத்து, மத்திய பிரதேசம் மற்றும் கோவா மாநிலங்களில், இவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில், அமலாக்கத் துறையினர் கடந்த வாரம் சோதனை நடத்தினர்.
இதில், 88.30 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் செய்துள்ள முதலீட்டு ஆவணங்களும் சிக்கியுள்ளன; விசாரணை நடந்து வருகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.