கடந்த புதன்கிழமை (11) திகதி மாலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் நடைபெற்ற அமைதியின்மையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும் நன்றி தெரிவித்துள்ள பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள், நாட்டில் ஏற்பட்டிருக்கும் இயல்பு மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியில் காணப்படும் எரிபொருள் தட்டுப்பாடும் நிலவுகின்றமையினால் இராணுவத்திற்கு குத்தகை அடிப்படையில் பெறப்பட்ட வாகனங்களை தவிர்த்து ஒரே நேரத்தில் பெரும் எண்ணிக்கையிலான படையினரை அழைத்துச் செல்லக்கூடிய வசதிகளை கொண்டுள்ள கவச வாகனங்களை படையினர் ரோந்து பணிகளுக்காக பயன்படுத்துகின்றனர் என்றும் தெரிவித்தார்.
கவச வாகனங்கள் வீதியோரங்களில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் காரணத்தினால் அமைதியான பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும், இராணுவ தொழில்முறை நடவடிக்கைகளுக்கமைய மேற்கொள்ளப்பட்டும் இந்த ரோந்து பணிகளின் போது எவ்வித அசம்பாவிதங்களும் பதிவாகவில்லை என்பதோடு, கடந்த 24 மணித்தியாலங்களில் எமது படையினருக்கு ஒத்துழை வழங்கிய சட்டத்தை மதிக்கும் பொது மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருந்து தெரிவித்த ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள், கடந்த திங்கட்கிழமை (09) காலி முகத்திடல் பகுதியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் வந்த குழுவொன்றினால் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பிலும் விளக்களித்தார். குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் வந்த குழுவினர் காலி முகத்திடல் வளாகத்திற்குள் நுழைந்த பின்னர் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு பொலிஸ்மா அதிபர் இராணுவத்தின் உதவியை கோரியிருந்த நிலையில், அண்மைய பகுதிகளில் சேவையிலிருந்த படையினரை குறித்த இடத்திற்கு சென்று பொது மக்களின் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸாருக்கு ஒத்துழைப்ப்புகளை வழங்குமாறு படையினரை அறிவுறுத்தியிருந்த போதும் படையினர் சம்பவ இடத்திற்கு செல்லும் முன்னதாக குழப்பத்தை ஏற்படுத்த வந்தவர்கள் பொதுச் சொத்துக்களுக்கு சேதத்தை விளைவித்துவிட்டு அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றிருந்தனர். இந்த சம்வம் தொடர்பில் மேற்படி விடயங்களை மட்டுமே என்னால் கூற முடியும் என்றும் தளபதியவர்கள் தெரிவித்திருந்தார்.
நாட்டிற்குள் அமைதியை பேணவும் நாடளாவிய ரீதியில் பொது மக்களுக்கு அவசியமான அத்தியாவசிய பொருட்களை போக்குவரத்துச் செய்யவும் படையினருக்கு உதவிகளை வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கும் அதேநேரம், கடந்த சில மணித்தியாலங்களில் எவ்விதமான வன்முறைச் செயற்பாடுகளும் பதிவாகவில்லை என்பதோடு நீர்கொழும்பு பகுதியில் இரு இன மக்கள் குழுக்களை தூண்டிவிடுவதற்காக மேற்கொள்ளப்படவிருந்த முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன என்றும் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், நாட்டு மக்களுக்கு அவசியமான அத்தியாவசிய தேவைகளின் போக்குவரதினை ஒழுங்குப்படுத்தும் முப்படையினருக்கும் வீதி தடைகளை ஏற்படுத்தி உரிய அனுமதியின்றி பயணிக்கும் வாகனங்களை நிறுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, படையினரின் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எந்தவொரு தேவைக்காகவும் குழுக்களாக வெளிப் பகுதிகளில் நடமாடுவதை தவிர்த்துகொள்ளுமாறும் அவர் கேண்டுக்கொண்டார்.
ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ஜெனரல் ஷவேந்திர சில்வா, மக்கள் தொடர்ந்தும் வன்முறைகளில் ஈடுபடுவதை பாதுகாப்பு படையினரால் அனுமதிக்க முடியாது. நன்கு அனுபவம் கொண்ட படை என்ற வகையில், சுய பாதுகாப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்புச் செயற்பாடு ஆகியவற்றை சரியான முறையில் முகாமைத்துவம் செய்யும் இயலுமை எமக்கு உள்ளது. அதனால், நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வெளிநாட்டு தரப்புக்கள் இங்கு வருவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. தொழில்ரீதியாகத் தகைமை உடைய முப்படையினர் என்ற வகையில் சொந்த பாதுகாப்பு விவகாரங்களை கையாளும் திறன்களை நாம் கொண்டுள்ளோம்” எனவும் ஜெனரல் ஷவேந்திர சில்வா சுட்டிக்காட்டினார்.
இலங்கை இராணுவம்