லண்டன்: இந்தோனேசியா – ஜகார்டாவில் மே 23 முதல் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய கேப்டன் விலகினார். இந்திய ஹாக்கி கேப்டன் ரூபிந்தர் பால் சிங்-குக்கு கையில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். ரூபிந்தர் பால் சிங் அணியில் இருந்து விலகியதால், தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக பிரேந்தர் லக்ரா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.