ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 6½ லட்சம் பேர் விண்ணப்பம்- ஜூலை மாதம் தேர்வு

சென்னை:

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி 8-ம் வகுப்பு வரையிலான பட்டதாரி ஆசிரியர்களுக்கும், இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு (டெட்) தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டெட் தேர்வு வருகிற ஜூலை மாதத்தில் நடத்தப்படும் என்று தெரிகிறது.

இதற்காக கடந்த மார்ச் 7-ந்தேதி விண்ணப்பம் கொடுக்க தொடங்கினார்கள்.

டெட் முதல் தாள், டெட் இரண்டாம் தாள் அனைத்துக்கும் சேர்த்து மொத்தம் 6½ லட்சம் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

டெட் தேர்வு நடத்தப்படும் தேதி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும்.

அதே போல் டெட் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படலாம் என்று பரவலாக பேசப்படுகிறது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2019-க்கு பிறகு 3 ஆண்டாக டெட் தேர்வு நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.