ஆமா.. நாமெல்லாம் ஈஸியா பணத்தை அனுப்புறோமே.. Google Pay இதில் எப்படி பணம் சம்பாதிக்கிறது தெரியுமா?

இந்தியாவில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகள் மூலம் பணம் பரிமாற்றம் செய்வது வேகமாக அதிகரித்து வருகிறது.

யுபிஐ சேவை ரகுராம் ராஜன் ஆர்பிஐ கவர்னராக இருந்த காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் அனைத்து வங்கி நிறுவனங்களும் தனித்தனியாக யுபிஐ செயலிகளை அறிமுகம் செய்தன. பின்னர் அதில் பேடிஎம், போன் பே, கூகுள் பே போன்ற மூன்றாம் தரப்பு செயலிகளும் இணைந்தன.

கூகுள் பே, போன் பே, பேடிஎம் பேமெண்டில் பிரச்சனையா? கவலை வேண்டாம்?Whatsapp-ல் புகார் அளிப்பது எப்படி?

இவை வங்கிகள் கிடையாது?

இவை வங்கிகள் கிடையாது?

மூன்றாம் தரப்பு யுபிஐ செயலிகள் வங்கிகள் கிடையாது. ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளுடன் இணைந்து பணம் பரிமாற்றம் சேவையை வழங்குகின்றன. இந்த நிறுவனங்கள் தங்களது செயலிகளை மிகவும் பிரபலமாக்க அதிக பணத்தையும் செலவு செய்கின்றன. எனவே வங்கி நிறுவனங்கள் பல தங்களது யுபிஐ செயலி சேவைகளை நிறுத்திவிட்டன. சில வங்கிகள் தங்களது இணய வங்கி செயலிகள் மூலம் யுபிஐ சேவையை வழங்குகின்றன.

எப்படி?

எப்படி?

யுபிஐ சேவையை வங்கிகள் அளிக்கும் போதே அதற்குக் குறைந்த அளவில்தான் அவர்களுக்கு வருமனாம் கிடைக்கும். அதை வங்கி நிறுவனங்கள் மூன்றாம் தரப்பு யுபிஐ சேவை நிறுவனங்களுக்கு வழங்குவதும் இல்லை. ஆனால் எப்படி இவர்களுக்கு வருமானம் கிடைக்கிறது என்பதுதான் பலரது கேள்வியாக உள்ளது.

யுபிஐ பரிவர்த்தனைகள்
 

யுபிஐ பரிவர்த்தனைகள்

இந்தியாவில் செய்யப்படும் சில்லறை பரிவத்தனைகளில் 60 சதவீதம் யுபிஐ செயலிகள் மூலமாகத்தான் நடைபெறுகிறது. அதில் 75 சதவீதம் 100 ரூபாய்க்கும் குறைவான தொகை கொண்ட பரிவத்தனைகள். மார்ச் மாதம் மட்டும் யுபிஐ செயலிகள் மூலம் 9.60 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது. வரும் மாதங்களில் இது தொடர்ந்து அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இவ்வற்றில் பெரும்பாலான யுபிஐ பரிவர்த்தனைகள் பேடிஎம், போன் பே, கூகுள் பே மூலம்தான் நடைபெறுகிறது. எனவே இந்த செயலிகள் எப்படி வருமானத்தை ஈட்டுகின்றன என இங்கு பார்க்கலாம்.

 

Google Pay எவ்வாறு பணம் சம்பாதிக்கிறது?

Google Pay எவ்வாறு பணம் சம்பாதிக்கிறது?

கூகுள் பே, போன் பே உள்ளிட்ட செயலிகள் கமிஷன்கள் மூலம் வருமானத்தைப் பெருக்கின்றன. அந்த கமிஷன்கள் மொபைல் ரீசார்ஜ், மின்சார கட்டணம், கேஸ் கட்டணம், இன்சூரன்ஸ் கட்டணம், திரைப்பட டிக்கெட் கட்டணங்களைச் செலுத்துவது போன்ற சேவைகள் வழங்கி, அதன் மூலம் வரும் கமிஷனை வருமானமாகப் பெறுகிறார்கள்.

பயனர்கள் விவரம்

பயனர்கள் விவரம்

கூகுள் பே பயனர் ஒருவர் மற்றொரு பயனருக்குப் பணம் அனுப்பும் போது அதில் இவர்களுக்கு எந்த கமிஷனும் கிடையாது. ஆனால் பயனர்கள் செலவு செய்யும் விவரங்களை வைத்து தங்களது சேவைகளை மெருகேற்ற இவை உதவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

How does Google Pay, Phonepe, Paytm earns money?

How does Google Pay, Phonepe, Paytm earns money? | Google Pay எவ்வாறு பணம் சம்பாதிக்கிறது?

Story first published: Friday, May 13, 2022, 16:39 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.