ஆவினில் ரூ21 கோடி முறைகேடு: தணிக்கை அறிக்கை கூறுவது என்ன?

சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் கடந்த 2019-2020ம் நிதியாண்டில், தளவாடங்கள் வாங்கியதில் முறையான அனுமதி பெறாமல் செயல்படுத்தியதில், ரூ. 21 கோடி முறைகேடு நடந்துள்ளதாக பால்வளத்துறை தணிக்கைத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் ஆ. பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் கீழ் செயல்பட்டு வரும் சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் கடந்த 2019-2020ம் நிதியாண்டில் நிலையான சொத்துக்கள் (Fixed Assets), UHT Plant அமைத்தல், 5000 கிலோ கொள்ளளவு கொண்ட நீராவி கொதிகலன் புகைபோக்கி (Steam Boiler Chimney) உள்ளிட்ட தளவாடங்கள் வாங்கியதில் முறையான அனுமதி பெறாமல் செயல்படுத்தியதால் ஆவினுக்கு சுமார் 21கோடியே, 26லட்சத்து, 27ஆயிரத்து, 694ரூபாய் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக பால்வளத்துறை தணிக்கைத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ. பொன்னுசாமி அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ. பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது: “

பால் உற்பத்தியாளர்கள் உழைப்பில் உருவான தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவினில் ஊழல்களும், முறைகேடுகளும் நடைபெறுவது தொடர்கதையாக இருப்பது வேதனையளிப்பதாக இருக்கிறது.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் கீழ் செயல்பட்டு வரும் சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் கடந்த 2019-2020ம் நிதியாண்டில் நிலையான சொத்துக்கள் (Fixed Assets), UHT Plant அமைத்தல், 5000 கிலோ கொள்ளளவு கொண்ட நீராவி கொதிகலன் புகைபோக்கி (Steam Boiler Chimney) உள்ளிட்ட தளவாடங்கள் வாங்கியதில் முறையான அனுமதி பெறாமல் செயல்படுத்தியதால் ஆவினுக்கு சுமார் 21கோடியே, 26லட்சத்து, 27ஆயிரத்து, 694ரூபாய் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக பால்வளத்துறை தணிக்கைத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019-2020 நிதியாண்டில், அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை ஆணையர் மற்றும் ஆவின் நிர்வாக இயக்குனர் என இரண்டு பதவிகளிலும் ஒருவரே இருந்ததால் அப்போது நடைபெற்ற சுமார் சுமார் 21 கோடியே, 26லட்சத்து, 27ஆயிரத்து, 694ரூபாய் முறைகேடுகள் கண்டிப்பாக அப்போதைய பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜிக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை.

மேலும், அப்போதைய ஆணையர் மற்றும் நிர்வாக இயக்குனராக இருந்த திரு காமராஜ் ஐஏஎஸ் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் மிகுந்த நட்புறவில் இருந்தவர் என்பதால் கண்டிப்பாக இருவரும் கூட்டாக சேர்ந்து அனுமதி கொடுத்திருக்க வாய்ப்புள்ளது.

எனவே, கடந்த அதிமுக ஆட்சியில் ஆவினின் 25 ஒன்றியங்கள் மற்றும் இணையத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற இயந்திர தளவாடங்கள் கொள்முதல், பால் கொள்முதல், பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை உள்ளிட்ட வரவு செலவு விபரங்களின் பால்வளத்துறையின் தணிக்கைத்துறை ஆய்வறிக்கையை முறையாக ஆய்வு செய்து முறைகேடுகளை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் அமைச்சரின் சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுடமையாக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.