ஆஹா… தனியார் ஊழியர்களுக்கு இந்த ஆண்டு இவ்ளோ சம்பளம் உயர்வு!

Business news in tamil: சீனாவில் உருவெடுத்த கொரோனா இந்தியாவில் பரவிய பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் பெரும் உயிர் மற்றும் பொருட்ச்சேதத்தை இந்தியா சந்தித்தது. மேலும் நாடு முழுதும் வேலை இழப்புகளும், பசியும் பட்டினியும் மக்களை வாட்டியது. நிறுவங்களில் வேலை செய்துகொண்டிருந்த ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்டது. சிலருக்கு பாதி சம்பளம் மட்டுமே கிடைத்தது.

பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் சம்பள உயர்வை ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். ஆனால் கொரோனா பிரச்சினையால் பெரும்பாலான நிறுவனங்களில் சம்பள உயர்வு நிறுத்தப்பட்டது. அதோடு பணி உயர்வு போன்ற சலுகைகள் குறைக்கப்பட்டு புதிதாக வழங்கப்படும் வேலைவாய்ப்புகளும் குறைந்தன.

இந்நிலையில், தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, தடுப்பூசிகளாக செலுத்தப்பட்டது. இதனால், கொரோனா பாதிப்பு குறைந்த எண்ணிக்கையில் பதிவாகி வருகிறது. இதனையடுத்து பல நிறுவங்கள் புதிதாக ஊழியர்களை வேலைக்கு சேர்த்து வருகிறது. மேலும் தங்களது ஊழியர்களுக்கான பழைய சம்பளத்தை வழங்கியும், சம்பள உயர்வு, ஊக்கத்தொகை, பணி உயர்வு போன்ற சலுகைகளையும் வழங்கி வருகின்றன.

இதனடியே, தனியார் துறை நிறுவனங்களில் இந்த ஆண்டில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து பெரிய அளவில் சம்பள உயர்வை ஊழியர்கள் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

சம்பள உயர்வு எவ்வளவு தெரியுமா?

டீம்லீஸ் நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வில், இந்த ஆண்டில் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு 8.13 சதவீதம் வரையில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளைப் போல இல்லாமல், இந்த ஆண்டில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் சம்பள உயர்வு குறித்து பரிசீலனை செய்திருப்பதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டீம்லீஸ் நிறுவனத்தின் ஆய்வில் எடுக்கப்பட்ட 17 துறைகளில் 14 துறைகள் ஒற்றை இலக்க சம்பள உயர்வைக் கொண்டிருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சராசரியாக 8.13 சதவீதம் வரை உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்களின் திறன் மேம்பாட்டுக்கு ஏற்ப சம்பள உயர்வை நிறுவனங்கள் தயாராக உள்ளன. குறிப்பாக தொழில்நுட்பத் துறையில் திறன் மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

இந்த ஆய்வு மொத்தம் 9 நகரங்களில் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக அகமதாபாத் நகரத்தில் 12 சதவீத உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது என்றும் பெங்களூரு, சென்னை, மும்பை, ஹைதராபாத், புனே ஆகிய நகரங்களிலும் இதே அளவு சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் துறை வாரியாக பார்த்தால் இ-காமெர்ஸ், டெக் ஸ்டார்ட் அப், சுகாதார பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சம்பள உயர்வு அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.