இத்தாலி,
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற கால்இறுதி போட்டி ஒன்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் கனடா நாட்டைச் சேர்ந்த பியான்கா ஆண்ட்ரீஸ்குடன் மோதினார்.
இந்த போட்டியில் இகா ஸ்வியாடெக் 7-6 (7-2), 6-0 என்ற செட் கணக்கில் பியான்காவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.
மேலும் மற்றொரு கால்இறுதி போட்டியில் பெலாரசியன் அரினா சபலெங்கா, 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீராங்கனை அமன்டா அனிசிமோவாவை வீழ்த்தி அரைஇறுதி போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறவுள்ள அரைஇறுதி போட்டியில் இகா ஸ்வியாடெக் மற்றும் அரினா சபலெங்கா மோத உள்ளனர்.