டெல்லி: இந்தியாவில் சராசரி கருவுறுதல் விகிதம் குறைந்து வருகிறது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதிக குழந்தைகளை பெறும் இஸ்லாமியர்களிடையேயும் கருவுறுதல் விகிதம் குறைந்து வருகிறது என்றும், இதற்கு பெண்களின் கல்வியறிவே காரணம் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 1992-93ஆம் ஆண்டு முதல், நாட்டின் திட்டமிடலுக்கான கொள்கைகளை வகுப்பதற்காக தேசிய குடும்ப சுகாதார ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. 2015-16இல் நான்காவது ஆய்வு நடத்தப்பட்ட நிலையில், கடந்த 2019-21 இடையே இரண்டு ஆண்டுகளில் ஐந்தாவது ஆய்வு நடத்தி, அதன் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
அதில், நாட்டில் அனைத்து சமூகத்தைச் சேர்ந்த பெண்களும் குழந்தை பெறுவதில் அதிக ஆர்வம் காட்டவிலலை. அவர்களின் குழந்தை பெறும் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளதாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஒரு பெண் சராசரியாக எத்தனை குழந்தைகளை பெற்றுக்கொள்கிறார் என்ற எண்ணிக்கையை வைத்து ஆய்வு செய்யப்படுகிறது. இது தொடர் பான கணக்கெடுப்பில் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில்,நாட்டின் மொத்த கருவுறுதல் விகிதம் 2.2 இல் இருந்து 2.0 ஆக ரிந்துள்ளது. இது, ஒரு பெண் சராசரியாக எத்தனை குழந்தைகளை பெற்றுக்கொள்கிறார் என்ற எண்ணிக்கையை வைத்து கணக்கிடப்படு கிறது. கடந்த 1992-93 முதல் தற்போது வரை சராசரி கருவுறுதல் விகிதம் 40 சதவிகிதம் சரிந்துள்ளது. இது, 3.4இல் இருந்து 2.0 ஆக குறைந்துள்ளது.
அதிக பட்சமாக முஸ்லிம் பெண்களின் கருவுறுதல் விகிதம் நான்காவது ஆய்வைக் காட்டிலும் 9.9 சதவிகிதம் சரிந்துள்ளது. அதாவது, 2.62 இல் இருந்த இந்த எண்ணிக்கை 2.36 ஆக குறைந்துள்ளது. ஆனாலும், சராசரி கருவுறுதல் விகிதத்தில் மற்ற சமூகங்களைக் காட்டிலும் முஸ்லிம்கள் தொடர்ந்து முதலிடத்திலேயே உள்ளனர் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 1992-93இல் இருந்து முஸ்லிம்களின் சராசரி கருவுறுதல் விகிதம் 46.5 சதவிகிதமும், இந்துக்கள் விகிதம் 41.2 சதவிகிதமாகவும் குறைந்து, முறையே முதல், இரண்டாம் இடத்தில் உள்ளனர். கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மூன்றாவது இடத்தில் உள்ளனர். சராசரி கருவுறுதல் விகிதம் சரிவுக்கு காரணம் பெண்கள் படிப்பறிவைப் பெறுவதைக் காட்டுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது