சென்னை: கடந்த நிதியாண்டில் மட்டும் 3545 நிறுவனங்களுக்கு ரூ.350 கோடி முதலீடு மானியமாக வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் த.மோ அன்பரசன் தெரிவித்துள்ளார். 6838 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 5512 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 90 சதவீத கடன் உத்தரவாதம் வழங்கும் அரசு தமிழ்நாடு அரசு தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.