இந்தோனேஷியாவில் கிழக்கு ஜாவாவில் உள்ள Kenjeran தண்ணீர் பூங்காவில் நீர் சறுக்கு உடைந்து விழுந்த கோர விபத்தில் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
நீர்ல் சறுக்கில் சறுகி விளையாட பயணிகள் காத்திருந்த நிலையில், திடீரென சறுக்கு உடைந்து 30 மீட்டர் தூரத்திற்கே கீழே பயணிகள் கீழே வீசப்பட்டனர்.
விபத்தில் 16 பேர் படுகாயம் அடைந்தனர். 8 பேருக்கு மேல் எலும்பு முறிவு ஏற்பட்டது.
பயணிகளின் பாரம் தாங்காமல் நீர் சறுக்கு உடைந்து இருக்கக் கூடும் என பூங்கா நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
விபத்து குறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.