இரண்டாவது முயற்சியையும் தவிடுபொடியாக்கிய உக்ரைன்: ஆற்றை நீந்தி கடந்து உயிர் தப்பித்த ரஷ்ய வீரர்கள்

உக்ரைனில் டொனெட்ஸ் நதியை கடக்க முயன்ற ரஷ்ய வீரர்களின் இரண்டாவது முயற்சியையும் உக்ரைன் பாதுகாப்பு படையினர் அதிரடியாக தாக்குதல் நடத்தி தகர்த்துள்ளனர்.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போரானது மூன்று மாதங்களாக தொடர்ந்து வரும் நிலையில், தற்போது ரஷ்ய ராணுவ படையினர் உக்ரைனின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளான டான்பாஸில் கவனம் செலுத்தி வருகின்றன.

அந்தவகையில் கடந்த மே 8ம் திகதி டான்பாஸின் Biolhorivka பகுதிக்கு அருகில் உள்ள டொனெட்ஸ் நதிக்கரையை ரஷ்ய வீரர்கள் தற்காலிக மிதப்பு பாலம் ஒன்றின் வழியாக கடக்க முயன்றனர்.

அப்போது உக்ரைன் ராணுவம் நடத்திய அதிரடியான ஏவுகணை தாக்குதலில் மிதப்பு பாலம் தகர்க்கப்பட்டதோடு, டஜன் கணக்கான ஆயுதமேந்திய ராணுவ வாகனங்களும் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும் இறந்து இருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கபட்டன.

இந்தநிலையில்,டொனெட்ஸ் நதிக்கரையின் தவறான பக்கம் சிக்கிக்கொண்ட ராணுவ வீரர்களையும், ராணுவ வாகனங்களையும் மீட்கும் முயற்சியில் இன்று ரஷ்ய ராணுவம் இரண்டாவது முறையாக மீண்டும் தற்காலிக மிதப்பு பாலம் ஒன்றை அமைத்து முயற்சி செய்தனர்.

இரண்டாவது முயற்சியையும் தவிடுபொடியாக்கிய உக்ரைன்: ஆற்றை நீந்தி கடந்து உயிர் தப்பித்த ரஷ்ய வீரர்கள்

ஆனால் அந்த முயற்சியையும் உக்ரைன் ராணுவம் கண்டறிந்து அதனையும் அதிரடியாக முறியடித்துள்ளனர்.

இதற்கு முந்திய முயற்சிகளின் போதே டஜன் கணக்கான ராணுவ வாகனங்களையும், வீரர்களையும் அழித்த உக்ரைன், தற்போது இரண்டாவது முயற்சியின் போது கூடுதலாக 70 ராணுவ வாகனத்தையும், இரண்டு பட்டாலியன் வீரர்களையும் சிதைத்துள்ளது.

இரண்டாவது முயற்சியையும் தவிடுபொடியாக்கிய உக்ரைன்: ஆற்றை நீந்தி கடந்து உயிர் தப்பித்த ரஷ்ய வீரர்கள்

கூடுதல் செய்திகளுக்கு: புலம்பெயர முயன்றவர்களின் படகு கவிழ்ந்து விபத்து: 11 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

மேலும் இதுதொடர்பாக வெளியான புதிய செயற்கைக்கோள் புகைப்படத்தில் உக்ரைன் ராணுவ தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக ரஷ்ய ராணுவ வீரர்கள் டொனெட்ஸ் நதியை நீந்தி தப்பித்து முயன்று இருப்பது தெரியவந்துள்ளது.  

இரண்டாவது முயற்சியையும் தவிடுபொடியாக்கிய உக்ரைன்: ஆற்றை நீந்தி கடந்து உயிர் தப்பித்த ரஷ்ய வீரர்கள்

இரண்டாவது முயற்சியையும் தவிடுபொடியாக்கிய உக்ரைன்: ஆற்றை நீந்தி கடந்து உயிர் தப்பித்த ரஷ்ய வீரர்கள்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.