இஸ்ரோவின் சுகன்யான் திட்ட ராக்கெட் பூஸ்டர் சோதனை வெற்றி

ஸ்ரீஹரி கோட்டா

விண்ணுக்கு மனிதனை அனுப்பும் இஸ்ரோவின் சுகன்யான் திட்ட ராக்கெட் பூஸ்டர் சோதனை வெற்றி பெற்றுள்ளது

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மனிதனை விணுக்கு அனுப்பும் திட்டத்தை மேற்கொண்டுள்ளது.  இதற்கு சுகன்யான் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.   இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ராக்கெட் பூஸ்டர் சோதனை நடத்தப்பட்டுள்ளது.  இந்த சோதனை ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்தில் நடத்தப்பட்டது.

இதில் ஜிஎஸ்எல்வி எம்.கே.3 ரக ராக்கெட்டில் பொருத்துவதற்கான ஹெச்.எஸ்.200 ராக்கெட் பூஸ்டர் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது. இந்த சோதனையின் போது 700 அளவுகோள்கள் கண்காணிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 20 மீட்டர் நீளம் கொண்ட HS200 ராக்கெட் பூஸ்டரில் 203 டன் திட எரிபொருள் ஏற்றப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. சுமார் 4,000 கிலோ எடை செயற்கைகோள் செலுத்தும் வாகனம் எல்.வி.எம்.-ன் முதல் நிலையில் எஸ்.200 மோட்டார் பொருத்தப்படும். இந்த வகை ராக்கெட் பூஸ்டர்களில் உலகிலேயே 2வது பெரிய ராக்கெட் பூஸ்டர் இது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சோதனை ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க வகையில், முதல் நிலை திட எரிபொருளால் இயக்கப்படுகிறது, மேலும் இரண்டாவது திரவ எரிபொருள் மற்றும் மூன்றாவது கிரையோஜெனிக் நிலை, திரவ ஹைட்ரஜன் மற்றும் திரவ ஆக்ஸிஜனால் இயக்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.