உக்ரைனில், பள்ளிகள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்துவதை ரஷ்ய படைகள் நிறுத்த வேண்டுமென ஐ.நா. குழந்தைகள் நிதியம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய ஐ.நா குழந்தைகள் நிதிய துணை நிர்வாக இயக்குனர் உமர் அப்டி, உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததாகவும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் வேதனை தெரிவித்தார்.
உக்ரைன் முழுவதும் நூற்றுக்கணக்கான பள்ளிகள் பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் ராணுவ நோக்கங்களுக்காக பள்ளிகளை பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்றும் கூறினார்.