உய்குர் முஸ்லிம்களை இன படுகொலை செய்கிறதா சீனா: கேள்விகளை எழுப்பும் தரவுக் கசிவு

சீனாவின் சின்ஜியாங் பகுதியில் 10,000 க்கும் மேற்பட்ட உய்குர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல்கள் கவலைகளை அதிகரித்துள்ளன.

சீனாவின் தரவுத்தளத்தில் இருந்து கசிந்த பட்டியல் இதனை வெளிப்படுத்துவதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது

சீனாவின் கம்யூனிஸ்ட் அதிகாரிகளால் நெருக்கமாகப் பாதுகாக்கப்படும் சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில், ஒரு மில்லியனுக்கும் அதிகமான உய்குர்களும் மற்ற பெரும்பான்மையான முஸ்லீம் சிறுபான்மையினரும் அங்கு அடைக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இந்த பிராந்தியத்தில் தடுப்பு மையங்கள் மற்றும் சிறைகளின் இரகசிய வலையமைப்பு உள்ளதாக நம்பப்படுகிறது.

மேலும் படிக்க | கொரோனாவை கட்டுப்படுத்த மக்களை உயிருடன் புதைக்கும் சீனா

தரவு கசிந்த வலைதளத்தில், பெயர், பிறந்த தேதி, இனம், அடையாள எண், குற்றச்சாட்டு, முகவரி, தண்டனை காலம் மற்றும் சிறைச்சாலை பற்றிய விவரங்கள் அடங்கிய கைதிகளின் தரவுகள் கசிந்துள்ளன.

தரவுகள் கசிந்த பட்டியலில், உய்குர் இன முஸ்லிம் மக்களில், காணாமல் போன பல குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது அம்பலமாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த தரவுக் கசிவில், 2014 முதல் 2018 வரையிலான தரவுகள் இருக்கின்றன.  இதில் “சமூக ஒழுங்கை சீர்குலைக்க ஒரு குழுவைச் சேகரித்தல்”, “தீவிரவாதத்தை ஊக்குவித்தல்” மற்றும் “சச்சரவுகளைத் தூண்டுதல் மற்றும் பிரச்சனையைத் தூண்டுதல்” உள்ளிட்ட பரந்த குற்றங்களுக்காக சின்ஜியாங் நீதிமன்றங்களால் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 21,000 என்ற எண்ணிக்கையில் இருந்து 133,000க்கு அதிகரித்திருப்பது கவலைகளை அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க | முத்தத்துக்கு தடா ஒன்றாக தூங்க தடை விதிக்கும் சீனாவின் வினோத விதிகள்

சீனா, உய்குர் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்வதை மேற்கத்திய நாடுகள் பலமுறை கண்டித்தாலும், பெய்ஜிங், இந்த வதை முகாம்களை “தொழில் பயிற்சி மையங்கள்” என்று சொல்லி தன்னுடைய அடாவடித்தனத்தை மறைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், சீனாவின் வலைதளத்தில் இருந்து கசிந்த தரவுகள், அந்நாட்டின் பொய்யை தோலுரித்து காட்டுவதாக இருக்கிறது.

சீனாவின் அதிகார துஷ்பிரயோகங்கள் குறித்து விசாரணை நடத்த, ஐ.நா மனித உரிமைகள் தலைவர் மிச்செல் பச்லெட் இந்த மாதம் சின்ஜியாங்கிற்குச் செல்கிறார்.

2017 ஆம் ஆண்டில், இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக “ஸ்டிரைக் ஹார்ட்” என்ற கருத்தியல் பிரச்சாரத்தை சீனா தீவிரப்படுத்தியதும் அதன் விளைவாக ஏற்பட்ட பாதிப்பும் வரலாறு.

ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனைகளின் விகிதம் முந்தைய ஆண்டை விட கிட்டத்தட்ட மூன்று மடங்காக இருப்பதால், பெரும்பாலான வழக்குகள், பொதுமக்களுக்கு அனுமதியில்லா நீதிமன்றத்திடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டன.

மேலும் படிக்க | மூளையின் செயல் திறனை பாதிக்கும் ‘5’ ஆபத்தான உணவுகள்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.