இந்தியாவின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் வெள்ளிக்கிழமை பல முக்கியமான முடிவை அடுத்தடுத்து அறிவித்துள்ளார்.
ஒரே நாளில் ரூ.5 லட்சம் கோடி காலி.. சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!
முதலில் டெக் உலகின் மிகப்பெரிய முக்கியமான டீல் ஆகக் கருதப்படும் டிவிட்டர்-ஐ கைப்பற்றும் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாக அறிவித்த எலான் மஸ்க், அடுத்ததாக இந்தியாவில் டெஸ்லா கார்களை விற்பனை செய்யும் திட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிடுவதாகவும் தெரிவித்துள்ளது எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா.
டெஸ்லா
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது, ஷோரூம் இடத்தைத் தேடுவதைக் கைவிட்டு உள்ளது. இந்திய அரசிடம் இருந்து குறைந்த இறக்குமதி வரிகளைப் பெறத் தவறியதால் இந்திய அணியில் சிலரை மட்டும் மீண்டும் பணியில் நியமித்துள்ளது.
இந்தியா
அமெரிக்கா மற்றும் சீனாவில் உற்பத்தி தொழிற்சாலைகள் இருக்கும் காரணத்தால் இந்தியாவில் தொழிற்சாலையோ அல்லது அசம்பிளி தளமோ அமைக்காமல் இறக்குமதி செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய வரி விதிப்பில் தளர்வுகளைப் பெற மத்திய அரசிடம் ஒரு வருடத்திற்கும் அதிகமாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்தியாவுக்கு வரும் திட்டத்தை நிறுத்தியுள்ளது டெஸ்லா.
இறக்குமதி
டெஸ்லா-வின் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் 100% அதிகமான கட்டணங்கள் வரியை குறைக்கும் முன், இந்தியாவில் உற்பத்தி தளத்தை அமைத்து உற்பத்தி செய்ய டெஸ்லா-வை இந்திய அரசு கேட்டு வந்த நிலையில், டெஸ்லா வரிச் சலுகை மட்டும் கேட்டு வந்தது.
பிப்ரவரி 1
இந்தியா தனது பட்ஜெட் வெளியிட்டில் வரி மாற்றங்களை அறிவிக்கும் என நம்பி டெஸ்லா பிப்ரவரி 1 ஆம் தேதிக்குள் இந்தியாவுக்கு வரும் காலக்கெடுவை நிர்ணயம் செய்தது. ஆனால் வரிக் குறைப்புகள் எதுவும் அறிவிக்கப்படாத காரணத்தால் இந்த முடிவு எடுக்கத் தள்ளப்பட்டு உள்ளது.
டெல்லி, மும்பை, பெங்களூரு
பல மாதங்களாக டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய முக்கிய நகரங்களில் டெஸ்லா தனது ஷோரூம்கள் மற்றும் சேவை மையங்களைத் திறப்பதற்கான இடத்தைத் தேடி வந்தது. ஆனால் அந்தத் திட்டமும் இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Elon musk owned Tesla halts India entry plans just like Twitter acquisition
elon musk owned Tesla halts India entry plans just like Twitter acquisition எலான் மஸ்க் திடீர் முடிவு.. இந்திய ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்..!