எலான் மஸ்க் முடிவால் டெஸ்லா முதலீட்டாளர்கள் செம ஹேப்பி.. ஏன் தெரியுமா..?!

டெக் உலகின் மிகப்பெரிய முக்கியமான டீல் ஆகக் கருதப்படும் எலான் மஸ்க்-ன் டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாக எலான் மஸ்க் நேரடியாக டிவிட்டர் தளத்திலேயே அறிவித்துள்ளார்.

இது எலான் மஸ்க்-கிற்குப் பெரும் பின்னடைவாக இருந்தாலும், டெஸ்லா, மெட்டா, டிவிட்டர் ஊழியர்களுக்கு நன்மை அளிக்கும் விஷயமாக மாறியுள்ளது.

“நீ செத்துட்டா இந்த செருப்பு எனக்கு தானே

டிவிட்டர் போலி கணக்குகள்

டிவிட்டர் போலி கணக்குகள்

டிவிட்டர் தளத்தில் போலி கணக்குகளின் விகிதத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெறும் வரை, ட்விட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றும் 44 பில்லியன் டாலர் திட்டம் “தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்று எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார், இந்தச் செய்தி தற்போது உலகம் முழுவதும் தற்போது காட்டு தீ போலப் பரவி வருகிறது.

ஃப்ரி மார்கெட்

ஃப்ரி மார்கெட்

இந்த அறிவிப்பு வாயிலாக அமெரிக்கப் பங்குச்சந்தையின் ஃப்ரி மார்கெட் வர்த்தகத்தில் டிவிட்டர் பங்குகள் சுமார் 20% வரையில் சரிந்துள்ளது. டிவிட்டரில் போலி கணக்குகள் பிரச்சனை நீண்ட காலமாக இகுக்கும் நிலையில் எலான் மஸ்க் முக்கியமான தரவுகளாக இதைப் பார்க்கிறார்.

டெஸ்லா பங்குகள்
 

டெஸ்லா பங்குகள்

இதற்கிடையில் வெள்ளிக்கிழமை அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஃப்ரீ மார்கெட் சந்தையில் டெஸ்லா பங்குகள் 5.45% உயர்ந்துள்ளது. இதேபோல் பேஸ்புக்-ன் மெட்டா பங்குகள், ஸ்னாப்சாட் பங்குகள் ஆகியவை உயர்வுடன் காணப்படுகிறது.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் டிவிட்டரை வாங்குவதாக அறிவித்த நாளில் இருந்து டெஸ்லா பங்கு மதிப்பு தொடர்ந்து சரிந்து வியாழக்கிழமை வரையில் சுமார் 35 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. தற்போது டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதில் ஏற்பட்ட தொய்வு டெஸ்லா பங்குகள் உயர துவங்கியுள்ளது.

நஷ்டம்

நஷ்டம்

டிவிட்டர் தளத்தில் போலி கணக்குகள் அதன் மொத்த பயனர்களில் 5% க்கும் குறைவாக அளவில் மட்டுமே இருப்பதாக ட்விட்டர் நிறுவனம் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட முடிவுகளில் தெரிவித்து இருந்தது. இது தவறாக இருக்கும் பட்சத்தில் எலான் மஸ்க் மிகப்பெரிய நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டி வரும். இதனாலே மஸ்க் தற்காலிகமாக நிறுத்தியுள்ளார்.

 எலான் மஸ்க் முக்கிய இலக்கு

எலான் மஸ்க் முக்கிய இலக்கு

போலி கணக்குகளை எதிர்த்துப் போராடுவது ட்விட்டரை சீர்திருத்த திட்டத்தில் எலான் மஸ்க்-கின் முக்கிய முயற்சியாக இருக்கும் பட்சத்தில் 10 சதவீதத்திற்கும் மேல் போலி கணக்கு இருந்தால் அது கட்டாயம் 44 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஸ்பேம் பாட்

ஸ்பேம் பாட்

கடந்த மாதம் ட்விட்டரை வாங்குவதற்கான தனது ஒப்பந்தத்தை அறிவிக்கும் ஒரு அறிக்கையில், அவர் ஸ்பேம் பாட்டுகளை மொத்தமாக அளிக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட்டு இருந்தார் எலான் மஸ்க்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Elon musk says Twitter deal temporarily on hold; Tesla, Meta shares up

Elon musk says Twitter deal temporarily on hold; Tesl, Meta shares up பின்வாங்கிய எலான் மஸ்க்.. டெஸ்லா முதலீட்டாளர்கள் செம ஹேப்பி.. ஏன் தெரியுமா..?!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.