டெல்லி: எல்ஐசி பங்குகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு பங்கு ஒன்று ரூ.949 என்ற விலையில் அந்நிறுவனம் ஒதுக்கீடு செய்துள்ளது. எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு தலா ரூ.60ம் ஊழியர்களுக்கு தலா ரூ.45ம் தள்ளுபடி விலையில் பங்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பங்கு ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.902ம் அதிகபட்ச விலையாக ரூ.949ம் எல்ஐசி நிர்ணயித்திருந்தது.