ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலிபா பின் சையத், உடல் நலக்குறைவால் காலமானார். 75 வயதான ஷேக் கலிபா கடந்த 2004ஆம் ஆண்டில் அந்நாட்டின் இரண்டாவது அதிபராக பொறுப்பேற்றார்.
அவரது மறைவை அடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் 40 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படும் என்றும், அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலகங்கள் 3 நாட்கள் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஷேக் கலிபா மறைவிற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, அவர் தலைமையில் இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான உறவு வளர்ச்சியடைந்ததாக குறிப்பிட்டார்.