ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரச தலைவர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் இன்று (13) காலமானார்.
இறக்கும் போது அவருக்கு 73 வயது.
கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 3 ஆம் திகதி முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபராகவும், அபுதாபியின் ஆட்சியாளராகவும் இருந்து வந்தார்.
“நாட்டு மக்களுக்கும், இஸ்லாமிய தேசத்திற்கும், உலக மக்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. அதிபரின் மறைவுக்காக 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். அமைச்சகங்கள், துறைகள், மத்திய அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படு”வதாக அந்நாட்டு நிருவாகம் அறிவித்துள்ளது.