பிரயாக்ராஜ்: ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை பிரயாக்ராஜ் போலீசார் கைது செய்த நிலையில், அவர்களிடம் இருந்து ரூ.3.16 லட்சம் ரொக்கம், 14 செல்போன்கள், கார் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. உத்தரபிரதேச மாநில சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு (பிரயாக்ராஜ் பிரிவு) தாகூர் டவுன் பகுதியில் சிலர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து சம்பவ இடத்தை சுற்றிவளைத்த சிறப்பு அதிரடிப்படை போலீசார், ஆறு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3.16 லட்சம் ரொக்கம், எல்இடி டிவி, செட்-அப் பாக்ஸ், இரண்டு ரிமோட்கள், ஒரு லேப்டாப், 14 செல்போன்கள், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சர்வோத்யா நகரைச் சேர்ந்த விகாஸ் கேசர்வானி (கும்பல் தலைவன்), தாகூர்டவுனைச் சேர்ந்த அம்பர் குமார் யாதவ் என்ற சவுரப், நைனியைச் சேர்ந்த சுபேந்திர பிரதாப் சிங், ஃபதேபூரைச் சேர்ந்த ஹிமான்ஷு ஷிவ்ஹரே, ஃபதேபூர் பிச்சுவாவைச் சேர்ந்த ரஞ்சீத் யாதவ் என்ற கோலு மற்றும் பப்ஹாம் நகரைச் சேர்ந்த சிவம் சவுராசியா ஆகியோர் ஆவர். இவர்களுடன் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.