ஐபிஎல் : பேர்ஸ்டோ ,லிவிங்ஸ்டன் அதிரடி : பஞ்சாப் அணி 209 ரன்கள் குவிப்பு

மும்பை,
ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது.இன்று  நடைபெறும் 60வது லீக் போட்டியில் பெங்களூரு  – பஞ்சாப்  அணிகள் மோதுகின்றன.
  இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி  பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது .

தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் ,ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர் .வந்த வேகத்தில் தொடக்கத்தில் பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடினார் .பந்துகளை சிக்ஸர் ,பவுண்டரிக்கு விரட்டினார் .ஜோஸ் ஹேசில்வுட் வீசிய 2 வது ஓவரில் 2 சிக்ஸர் ,2 பவுண்டரி பறக்க விட்டார் .மறுபுறம் நிதனமாக விளையாடிய தவான் 21 ரன்களில் ஆட்டமிழந்தார் .
 தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பேர்ஸ்டோ 21 பந்துகளில் அரைசதம் அடித்தார் .பஞ்சாப் அணி 6 ஓவர்களில் 83 ரன்கள் குவித்தது .இதனை தொடர்ந்து பணுகா ராஜபக்சே 1 ரன்னில்  விக்கெட்டை பறிகொடுத்தார் .
மறுபுறம் சிறப்பாக விளையாடிய பேர்ஸ்டோ 29 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஷாபாஸ் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பிறகு  ரன் ரேட்  குறையும் என எதிர்பார்க்கப்பட்டது .ஆனால் பின்னர் லியாம் லிவிங்ஸ்டன் அதிரடியாக விளையாடினார் ,அவர் பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு விரட்டினார் .
விக்கெட்டுகள் விழுந்தாலும் லிவிங்ஸ்டன் அதிரடியை விடவில்ல்லை .அபாரமாக விளையாடிய லிவிங்ஸ்டன் 42 பந்துகளில் 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார் .
இறுதியில்  பஞ்சாப்  அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது .தொடர்ந்து 210 ரன்கள் இலக்குடன் பெங்களூரு அணி விளையாடுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.