ஒரு கையில் குழந்தை, மறுகையில் சூட்கேஸ்., விமானத்தில் பயணிகளை மிரளவைத்த தாய்!


வெளிநாடு ஒன்றில் விமானத்தில் கைக்குழந்தையுடன் ஒரு பெண் தனது காலால் விமானத்தில் உள்ள மேல்நிலை கேபினை பெண் தனது காலால் மூடி பார்ப்பவரை மிரள வைத்துள்ளார்.

பெண்கள் என்றாலே, குறிப்பாக ஒரு கைக்குழந்தையின் தாய் என்றாலே எப்போதும் சில விடயங்களுக்ககா இன்னொருவரை அல்லது ஒரு ஆணை சார்ந்தே இருப்பார்கள் என்ற எண்ணத்தை உடைக்கும் வைகையில் இப்போது இந்த ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ட்விட்டரில் Figen என்ற பயனர் புதைக்கிழமையன்று வெளியிட்ட ஒரு வீடியோவில், ஒரு இளம் பெண் ஒரு கையில் தனது கைக்குழந்தையை வைத்திருந்தார். இந்த நிலையில், வேறை யாராக இருந்தாலும் இருக்கைக்கு மேலிருக்கும் கேபினில் இருந்து தனது பெட்டியை பெட்டியை எடுக்க மற்றோருவரைந் உதவியை நாடியிருப்பர்.

ஒரு கையில் குழந்தை, மறுகையில் சூட்கேஸ்., விமானத்தில் பயணிகளை மிரளவைத்த தாய்!

ஆனால் இப்பெண், தானாகவே மேல் கேபினைத் திறந்து, அதிக எடையுடன் காணப்படும் தனது பெட்டியையும் தனது மற்றோரு கையால் எடுத்துள்ளார். அந்த நிலைமையில், அப்பெண் அந்த கேபினை மூடாமல் அப்படியே விட்டுச் சென்றிருக்கலாம்.

அனால், அங்கு நடந்ததே வேறு..,

அவர் தனது ஒரு காலை அசால்ட்டாக உயர்த்தி தன்னைவிட உயரமாக இருக்கும் கேபினை மூடினார். அப்போது அவருக்கு உதவி செய்ய ஓடிவந்த விமான பணிப்பெண் ஒருவர் அவரது திறமையை பார்த்து மிரண்டுபோனார்.


அவரது சிறிய ஸ்டண்ட் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமானது, அந்த வீடியோ 2.3 லட்சம் பார்வைகள் மற்றும் 7,500-க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது. மேலும், கருத்துப் பிரிவில் அப்பெண்ணைப் பயனர்கள் பாராட்டி வருகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.