கனமழை எச்சரிக்கை காரணமாக, கேரளாவில் திருச்சூர் பூரம் திருவிழாவையொட்டி நடைபெறும் வாண வேடிக்கை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பிரசித்திபெற்ற திருச்சூர் வடக்கு நாதன் கோயிலில், யானைகள் அணிவகுப்பு, வாண வேடிக்கை நிகழ்ச்சிகளை காண வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம். கொரோனா பொதுமுடக்கம் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு யானைகள் அணிவகுப்பும், குடைமாற்றும் நிகழ்ச்சியும் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதன் பின்னர், அதிகாலையில் வாண வேடிக்கை நிகழ்ச்சிக்காக திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் கனமழை எச்சரிக்கை காரணமாக, வருகிற 15ஆம் தேதிக்கு வாண வேடிக்கை நிகழ்வை ஒத்தி வைப்பதாக விழா குழுவினர் தெரிவித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM