பெங்களூரு: கர்நாடகாவில் மதமாற்ற தடை சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளதாக மாநில காங்கிரஸ் கட்சி உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
பாஜக ஆளும் மாநிலங்களில் மதமாற்றத்தை தடுக்கும் வகையில் மதமாற்றத் தடை சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடக மாநிலத்திலும் மதமாற்ற தடை சட்டம் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் சிறப்பாணை பிறப்பிப்பது தொடர்பாக அங்கு முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. கூ இக்கூட்டத்தில் மதமாற்ற தடை சட்டம் உடனடியாக அமலுக்கு வரும் நிலையில் சிறப்பாணை பிறப்பிப்பது தொடர்பாக விவாதித்து அதற்கு அனுமதி பெறப்பட்டதாக அமைச்சர் ஜேசி மாதுசாமி செய்தியாளர்களிடம் கூறினார்.
அதன்படி, கர்நாடக மாநிலத்தில் மதமாற்ற சட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட உள்ளது. மாநிலத்தில் பலவந்தமாகவோ? இலவச கல்வி, வேலைவாய்ப்பு திருமணம் உள்ளிட்டவை வழங்கப்படும் என ஆசை காண்பிக்கப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு 3 வருடம் சிறைத்தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
அப்பாவி பெண்கள் , எஸ்சி.,எஸ்டி மக்களை ஏமாற்றி மதமாற்றம் செய்தால் மூன்று முதல் 10 வருடம் சிறைத்தண்டனையும் ரூ.50 ஆயிரம் வரை சிறைத்தண்டனையும் கிடைக்கும். கூட்டாக மத மாற்றம் செய்யப்பட்டால் ரூ.1 லட்சம் வரை அபராதமும் 10 வருடம் சிறைத்தண்டனையும் கிடைக்கும்.
இந்த சட்டத்தின் காரணமாக கட்டாய மதமாற்றம் செய்யும் நபர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
மாநில பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு மாநில காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
முன்னதாக கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் வகையில் கர்நாடக மத சுதந்திர உரிமை பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் மசோதா அம்மாநில சட்டசபையில், கடந்தாண்டு டிசம்பரில் நடந்த கூட்டத்தொடரில், சட்ட மசோதா தாக்கல் செய்தபோது, மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மாநில காங்கிரஸ் கட்சி தலைவரும், எம்எல்ஏவுமான டி.கே.சிவகுமார், சட்டசபையில் மசோதா நகலை கிழித்தெறிந்தார். தொடர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து மசோதா நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.