புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாகவும், அடுத்து நடைபெறவுள்ள தேர்தல்களுக்கான உத்திகளை வகுப்பது தொடர்பாகவும், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் பங்கேற்கும் மூன்று நாள் சிந்தனை அமர்வு மாநாடு இன்று தொடங்குகிறது.
இதில் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா உட்பட 430 மூத்த நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். ராகுல் காந்தியை மீண்டும் கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என்று இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
சிந்தனை அமர்வு மாநாட்டை தொடங்கி வைத்து சோனியாகாந்தி இன்று உரை நிகழ்த்துகிறார். இதற்காக விமானம் மூலம் அவர் உதய்பூர் செல்கிறார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள ராகுல்காந்தி டெல்லியில் இருந்து உதய்பூருக்கு ரெயிலில் பயணம் மேற்கொண்டார்.
இதற்காக, டெல்லி சராய் ரோஹில்லா ரெயில் நிலையத்திற்கு அவர் நேற்று வந்தபோது, அவரை வழியனுப்பி வைக்க ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் ரெயில் நிலையத்தில் கூடி இருந்தனர்.
அப்போது, ரெயில் நிலையத்திலிருந்த தொழிலாளிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.