காதல் கதையில் அஞ்சலி நாயர்
விமான பணிப்பெண்ணாக இருந்து சினிமாவிற்கு வந்தவர் அஞ்சலி நாயர். நெடுநல்வாடை படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு அவர் நடித்த டானாக்காரன் படம் சமீபத்தில் வெளியானது. தற்போது காலங்களில் அவள் வசந்தம் படத்தில் நடித்து வருகிறார். திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரிக்கும் இந்த படத்தில் கவுசிக் என்ற புதுமுகம் ஹீரோவாக நடிக்கிறார். ராகவ் மிர்தாத் இயக்குகிறார்.
அஞ்சலி நாயர் கூறியதாவது: நெடுநல்வாடை படத்திற்கு பிறகு டானாக்காரன் வாய்ப்பு வந்தது. அந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதுதான் கொரோனா வந்தது. அதனால் தமிழில் ஒப்பந்தமான சில படங்களில் நடிக்க முடியவில்லை. சில மலையாள படங்களில் நடித்தேன். தற்போது காலங்களில் அவள் வசந்தம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறேன். திருமணத்துக்கு முன்பு ஒரு ஆணும் பெண்ணும் காதலிப்பது உண்மையான காதலா, திருமணத்திற்கு பிறகு காதலிப்பது உண்மையான காதலா என்பதை காமெடி, ரொமான்ஸ் கலந்து சொல்லும் படம் இது. விரைவில் அடுத்து நடிக்கும் படங்கள் பற்றிய அறிவிப்புகள் அந்தந்த தயாரிப்பு நிறுவனங்களால் வெளியிடப்படும். என்றார்.