வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஸ்ரீநகர்: காஷ்மீர் பண்டிட் சமுதாயத்தை சேர்ந்த 36 வயது இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்தும், உரிய பாதுகாப்பு வழங்கக்கோரியும் அச்சமுதாயத்தினர் நேற்று இரவு முதல் விடிய விடிய போராட்டம் நடத்தினர்.
காஷ்மீரில் பல்வேறு இடங்களில் காஷ்மீர் பண்டிட்களுக்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் சுமார் 4 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தங்கியுள்ளனர். அவர்களுக்கு 2010ம் ஆண்டு சிறப்பு வேலைவாய்ப்பு திட்டத்தின்படி பல்வேறு பணிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று மாலை புத்கம் மாவட்டத்தின் சதூரா கிராமத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் புகுந்த பயங்கரவாதிகள், அங்கு 10 ஆண்டுகளாக பணியாற்றி வரும் காஷ்மீர் பண்டிட் சமுதாயத்தை சேர்ந்த ராகுல் பட்(36) என்பவரை சுட்டனர். அதில் படுகாயமடைந்த ராகுல் பட் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும், முகாம்களில் வசித்த பண்டிட் சமுதாயத்தினர், பல்வேறு இடங்களில் இரவு முதல் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர். சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். பேரணியிலும் ஈடுபட்ட அவர்கள், மத்திய அரசு மற்றும் கவர்னருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
Advertisement