கடந்த சில தினங்களாகவே கிரிப்டோகரன்சி சந்தையானது பெரும் சரிவினை கண்டு வந்த நிலையில், பல கரன்சிகளின் மதிப்பானது மிக மோசமான சரிவினைக் கண்டு வந்தது. குறிப்பாக டெரா (லூனா) கரன்சியானது மிக மோசமான சரிவினைக் கண்டது.
கடந்த 7 அமர்வுகளில் மட்டும் இந்த கரன்சியானது 100% சரிவினைக் கண்டது.
இதற்கிடையில் இந்தியாவின் பிரபலமான கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் ஆன WazirX மற்றும் CoinDCX-ல் லூனார கரன்ஸசியினை டீ லிஸ்ட் செய்துள்ளன. ஏன் இப்படி அதிரடியான முடிவினை இந்த எக்ஸ்சேஞ்ச்கள் எடுத்துள்ளன. முதலீடுகளின் நிலை என்னவாவது? மற்ற முக்கிய கரன்சிகளின் மதிப்பு என்ன? இன்றைய நிலவரம் என்ன வாருங்கள் பார்க்கலாம்.
2022-ம் ஆண்டு உலகின் டாப் 10 நிறுவனங்கள் இவைதான்.. இந்திய நிறுவனங்கள் நிலை என்ன?
100% சரிவு
லூனாவின் மதிப்பானது கடந்த சனிக்கிழமையன்று 80 டாலர்கள் என்ற லெவலில் காணப்பட்டது. இது 0.00002446 டாலர்கள் என்ற லெவலில் காணப்பட்டது. இதன் மதிப்பில் கிட்டதட்ட 100% சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் இதன் சந்தை மதிப்பும் 30 பில்லியன் டாலர் என்ற நிலையில் இருந்து 6 மில்லியன் டாலராக குறைந்தது.
பணத்தை எப்படி திரும்ப பெறுவது?
இந்தியாவின் மிகப்பெரிய கிரிப்டோ தளமான WazirX, Luna/USDT, Luna/INR, and Luna/WRX உள்ளிட்ட கரன்சி பேர்களை நீக்குவதாக தெரிவித்துள்ளது. பயனர்கள் தங்கள் நிதிகளை திரும்ப பெறுவதற்கு பைனான்ஸ் இலவச பரிமாற்றத்தினை செயல்படுத்த உள்ளதாகவும் எக்ஸ்சேஞ்ச் தரப்பில் தெரிவித்துள்ளது.
பிட்காயின்
பிட்காயின் மதிப்பானது கடந்த அமர்வில் பலத்த சரிவினைக் கண்டிருந்த நிலையில், இன்று 9.39% அதிகரித்து., 30,654.50 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் உச்சமதிப்பு 30,947.27 டாலர்களாகும். இதே இதன் 24 மணி நேர குறைந்தபட்ச விலை 27,831.83 டாலர்களாகும்.
எத்திரியம் & கார்டனோ
இதே எத்திரியத்தின் மதிப்பானது 12.89% அதிகரித்து, 2126.64 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இதே எக்ஸ் ஆர்பி மதிப்பானது 21.84% அதிகரித்து, 0.451012 டாலர்களாகவும் வர்த்தகமாகி வருகின்றன.
இதே கார்டனோ 27.39% அதிகரித்து, 0.587179 டாலர்களாக உள்ளது.
ஸ்டெல்லர் மதிப்பானது 19.45% அதிகரித்து, 0.138880 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.
டோஜ்காயின் & யுனிஸ்வாப்
இதே டோஜ்காயின் மதிப்பு 23.57% அதிகரித்து, 0.092687 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.
போல்கடோட் மதிப்பானது 38.78% அதிகரித்து, 11.53 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.
யுனிஸ்வாப் மதிப்பானது 21.50% அதிகரித்து, 5.35 டாலர்களாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
indian exchanges delist luna currency after 100% fall in seven days
Luna currency is de-listed on the India Cryptocurrency Exchange