இந்த ஆண்டு இந்திய தொழில்துறையினர் தங்கள் ஊழியர்களுக்கு சராசரியாக எட்டு விழுக்காடு ஊதிய உயர்வை வழங்க வாய்ப்புள்ளதாக ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது.
கொரோனா பரவலுக்குப் பின் நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருகிறது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளைப் போல அல்லாமல், இந்த ஆண்டு அனைத்து துறைகளிலும் அனைத்து பணிகளுக்கும் ஊதிய உயர்வு வழங்க பரிசீலிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 17 துறைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 14 துறையினர், 9 விழுக்காடு வரை, அதாவது ஒற்றை இலக்கத்தில் ஊதிய உயர்வு அளிக்க திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக சுகாதாரம் மற்றும் அது சார்ந்த தொழில்கள், தகவல் தொழில்நுட்பம், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளிட்ட மூன்று துறைகளில் 10 விழுக்காடுக்கும் அதிகமாக இரட்டை இலக்கத்தில் ஊதிய உயர்வை அளிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இந்த ஆண்டு சராசரியாக 8.13% சம்பள உயர்வு கிடைக்கும் என இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM