லண்டன்:கொரோனாவில் இருந்து குணமடைந்தோரில், பாதிக்கும் மேற்பட்டோருக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு பின்பும், அதற்கான அறிகுறிகள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகம் முழுதும், கொரோனாவால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து வெளியாகும் ‘லான்செட்’ என்ற மருத்துவ இதழில், சமீபத்தில் ஒரு ஆராய்ச்சி கட்டுரை வெளியானது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மேம்பட்டு, வேலைக்கும் செல்ல துவங்கிவிட்டனர். எனினும், குணமடைந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு பின்னும், அதற்கான அறிகுறிகள் இருக்கின்றன. குறைந்தபட்சம் ஒரு அறிகுறியாவது அவர்களிடம் உள்ளது. இவர்களில் பலருக்கு, நீண்ட கால பக்கவிளைவுகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
லண்டன்:கொரோனாவில் இருந்து குணமடைந்தோரில், பாதிக்கும் மேற்பட்டோருக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு பின்பும், அதற்கான அறிகுறிகள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.உலகம் முழுதும், கொரோனாவால்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.