கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் பச்சாபாளையத்தில் மது போதையில் மாடியில் இருந்து தவறி விழுந்த வடமாநில தொழிலாளி உயிரிழந்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் மாலிக், பச்சாபாளையத்தில் தங்கி கட்டட வேலை செய்து வந்தார். நேற்று முந்தினம் இரவு சக தொழிலாளர்களுடன் சேர்ந்து மரு அருந்தியதாக சொல்லப்படுகிறது.
மாடி சுவற்றில் அமர்ந்து கொண்டு செல்போனில் பேசி கொண்டிருந்த போது, தவறி விழுந்து தலையில் பலத்த அடிப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.