வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லுாதியானா-பஞ்சாபில், மதிய உணவு வாங்க ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்துச் சென்ற ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் பரவி, அதை ஏராளமானோர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, பள்ளிக் கல்வியை மேம்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம், சமீபத்தில் லுாதியானாவில் நடந்தது. பகவந்த் மான் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில் பங்கேற்றோருக்கு, மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. உணவை பெற வரிசையாக செல்லாமல், தலைமை ஆசிரியர்கள் ஒருவரை ஒருவர் முண்டிஅடித்துச் சென்றனர்.
இதை ஒருவர் ‘வீடியோ’ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோவை ஏராளமானோர் கடும் விமர்சனத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.’அனைவருக்கும் உதாரணமாக திகழ வேண்டிய ஆசிரியர்களே இப்படி இருந்தால், மாணவர்களுக்கு எப்படி ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பர்’ என பலர் கேள்வி எழுப்பிஉள்ளனர்.ஆனால், ‘பசி வந்தால் பத்தும் பறந்து போகும்’ என்பதற்கு உதாரணமாக ஆசிரியர்கள் தங்கள் ‘அந்தஸ்தை’ மறந்து விட்டனர் என்றும் சிலர் விமர்சித்து உள்ளனர்.
Advertisement