சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்தவர் பூபதி. இவர் தனது உறவினர் வீட்டிற்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது குரோம்பேட்டை ஜி.எஸ்.டி.சாலையில் வந்த போது காரின் முன்பக்கத்தில் இருந்து புகைவர தொடங்கியது. அதனால், காரை விட்டு இறங்கினார்.
திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த சாலையில் பரபரப்பு ஏற்படுத்தியது.