சிவகங்கை பேருந்து நிலையம் அருகே லாரி மோதிய விபத்தில் அரசுப் பள்ளி தலைமையாசிரியை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், சிசிடிவி காட்சியின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லதா என்பவர் அரசு நகராட்சிப் பள்ளியில் பணியாற்றும் நிலையில், இன்று காலையில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். பேருந்து நிலையம் அருகே அவர் சென்றபோது பேருந்தை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது, எதிர்பாராவிதமாக பக்கவாட்டில் சென்ற சரக்கு லாரி உரசியதில் அவர் சாலையில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்தியபின் தப்பிச்செல்ல முயன்ற லாரியை மடக்கிப் பிடித்த மக்கள், ஓட்டுநரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.