அரசு வேலைவாய்ப்புகளில் ஐந்தில் ஒரு பங்கைக் குறைக்க வேண்டும் என்று பிரிட்டன் அரசு முடிவெடுத்திருக்கிறது.
வரிக் குறைப்புகளுக்காக பணம் தேவைப்படும் நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த முடிவை எடுத்திருப்பதாக டெய்லி மெயிலில் வெளியான அறிக்கை ஒன்று கூறுகிறது.
பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் குடும்பங்கள் மீதான நிதி அழுத்தத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குமாறும் பிரிட்டன் பிரதமர், தனது அமைசரவையின் தனது உயர்மட்ட குழுவிடம் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
மக்களின் அடிப்படை செலவுகள் தற்போது மிக அதிகமாக உள்ளது என்பதையும், இது உலக அளவில் அதிகரித்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் படிக்க | உய்குர் முஸ்லிம்களை இன படுகொலை செய்கிறதா சீனா: கேள்விகளை எழுப்பும் தரவுக் கசிவு
“வரி செலுத்துவோரிடமிருந்து அரசாங்கம் பெறும் ஒவ்வொரு பவுண்டும் அவர்கள் தங்கள் சொந்த முன்னுரிமைகளுக்காக, அவர்களின் சொந்த வாழ்க்கையில் செலவிடக்கூடிய பணம்” என்று பிரிட்டன் பிரதமர் கூறியதாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.
அரசுப் பணிகளில், 91,000 வேலைகளைக் குறைப்பதால், ஆண்டுக்கு 3.5 பில்லியன் பவுண்டுகள் ($4.27 பில்லியன்) சேமிக்கப்படும் என்றும், அதை செயல்படுத்த, ஜான்சன் தனது அமைச்சர்களுக்கு 30 நாட்கள் கால அவகாசம் கொடுத்ததாக பத்திரிக்கை செய்தி விளக்கமாக தெரிவித்துள்ளது.
அதிக அதிகாரிகள் பணியிடத்திற்கு திரும்ப வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த ஜான்சன், “அலுவலகத்திற்குள் நுழைவதையும், பணியிடத்திற்குள் நுழைவதையும் நாம் மீண்டும் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று செய்தித்தாளிடம் கூறினார்.
மேலும் படிக்க | உலகின் மிகப்பெரிய வெள்ளை வைரம்: விலை 18 8 மில்லியன் டாலர்
கொரோனா பரவலுக்கு பிறகு, ஆன்லைன் வேலைகளும், வீட்டில் இருந்தபடியே பணியாற்றும் முறையை, தனியார் துறையைப் போலவேஅரசுத் துறைகளும் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
“என்னுடன் உடன்படாத பலர் இருப்பார்கள், ஆனால் மக்கள் மற்றவர்களால் சூழப்பட்டிருக்கும் போது, மக்கள் அதிக உற்பத்தி, அதிக ஆற்றல், கருத்துக்கள் நிறைந்தவர்கள் என்று நான் நம்புகிறேன்.”
டெய்லி மெயில் இந்த அறிக்கையை வெளியிட்ட பிறகு, எஃப்.டி.ஏ தொழிற்சங்கத்தின் ஸ்காட்டிஷ் தலைவர் டேவ் பென்மேன் இவ்வாறுட்வீட் செய்தார்,
மேலும் படிக்க | இங்கிலாந்து மகாராணியின் உடல்நிலையும் அரியணைக்கான அடுத்த வாரிசும்
“தங்களுக்கு ஒரு தீவிரமான திட்டம் இல்லையென்றால், இது மற்றொரு தலையெழுத்து ஸ்டண்ட் அல்லது பொறுப்பற்ற முறையில் பொது சேவைகளை குறைப்பது தவறானது. இதன் விளைவுகளைப் பற்றி சிந்திக்க வேண்டும் அல்லது அக்கறை கொள்ளவேண்டும்.” என்று அந்த டிவிட்டர் கூறுகிறது.
உள்ளாட்சித் தேர்தலில் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சி 50 இடங்களுக்கு மேல் இழந்ததால், இந்த உத்தரவு வந்துள்ளதாக கருதப்படுகிறது.
தற்போது இங்கிலாந்து நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 2020 ஆம் ஆண்டு ரஷ்யாவில் பிறந்த செய்தித்தாள் பாரோனை பாராளுமன்றத்திற்கு நியமித்த சர்ச்சை தொடர்பாக ஜான்சனின் அரசாங்கத்தை தொழிலாளர் கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் குற்றம் சாட்டினார்.
மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?