அகில இந்திய தொழில் நிறுவனங்களில் கூட்டமைப்பான சி.ஐ.ஐ (Confederation of Indian Industry) அமைப்புக்கு ஒவ்வொரு ஆண்டும் புதிய தலைவர், துணைத் தலைவர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த அமைப்பின் இந்த 2022-23-ஆம் ஆண்டுக்கான அகில இந்திய தலைவராக தேவு செய்யப்பட்டு இருக்கிறார் பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்தின் சேர்மனும், மேனேஜிங் டைரக்டருமான சஞ்சீவ் பஜாஜ்.
அதேபோல, இந்த அமைப்பின் அகில இந்தியத் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் டி.வி.எஸ் சப்ளை செயின் சொல்யூன்ஸ் நிறுவனத்தின் எக்ஸிகியூட்டிவ் வைஸ் சேர்மன் ஆர்.தினேஷ். இந்த இருவரும் அடுத்த ஓராண்டு காலத்துக்கு அவர் இந்தப் பதவியில் இருப்பார்கள் என சி.ஐ.ஐ அமைப்பு தெரிவித்திருக்கிறது.
சாதித்த சஞ்சய் பஜாஜ்!
பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்தின் சேர்மனும், மேனேஜிங் டைரக்டருமான சஞ்சீவ் பஜாஜ், சி.ஐ.ஐ அமைப்பில் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். கடந்த 2019-20-ல் அவர் மேற்கு மண்டலத்தின் தலைவராக இருந்தார். சி.ஐ.ஐ அமைப்பின் ஃபின்டெக் நிறுவனங்களுக்கான இன்ஷுரன்ஸ் மற்றும் பென்ஷன் தொடர்பான தேசிய கமிட்டியையும் அவர் வழிநடத்தியிருக்கிறார்.
ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் படித்த சஞ்சீவ் பஜாஜ், உலகப் பொருளாதார மன்றம் உள்பட பல்வேறு அமைப்புகளில் ஓர் உறுப்பினராக உறுப்பினராக முக்கியப் பணியாற்றி இருக்கிறார். மிகச் சிறந்த தொழில்முனைவர், பிசினஸ் லீடர், பெஸ்ட் பேங்கர், மிக மதிப்பு மிக்க சி.இ.ஒ என பல்வேறு விருதுகளையும் வாங்கிய பெருமை கொண்டவர் சஞ்சய் பஜாஜ்.
திரும்பிப் பார்க்க வைக்கும் தினேஷ்!
சி.ஐ.ஐ அமைப்பின் அகில இந்தியத் துணைத் தலைவராக தேர்வாகி இருக்கிறார் டி.வி.எஸ் சப்ளை செயின் சொல்யூன்ஸ் நிறுவனத்தின் எக்ஸிகியூட்டிவ் வைஸ் சேர்மன் ஆர்.தினேஷ். கடந்த 20 ஆண்டுகளாக சி.ஐ.ஐ அமைப்பில் பல்வேறு காலத்தில் தலைமைப் பொறுப்பினை ஏற்று செயல்பட்டிருக்கிறார் ஆர்.தினேஷ்.
கடந்த 2018-19-ஆம் ஆண்டில் சி.ஐ.ஐ அமைப்பின் தென் மண்டலத்தின் தலைவராக இருந்து, தென் மாநிலங்களில் உள்ள தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்குப் பல நல்ல விஷயங்களைச் செய்தார். லாஜிஸ்ட்டிக் தொடர்பான சி.ஐ.ஐ அமைப்பின் தேசிய கமிட்டியிலும், சி.ஐ.ஐ.யின் குடும்பத் தொழில் தொடர்பான அமைப்பிலும் அங்கம் வகித்திருக்கிறார்.
கல்லூரியில் வணிகவியல் படித்த தினேஷ், கடந்த 2014-ல் டைகான் அமைப்பு வழங்கிய ‘ஆன்ட்ரபிரனர் ஆஃப் த இயர்’ விருதையும், கடந்த 2017-ல் ஏர்னஸ்ட் & யெங் அமைப்பு வழங்கிய மிகச் சிறந்த தொழிலதிபர் என்கிற விருது உள்பட பல்வேறு விருதுகளையும் பெற்று, திரும்பிப் பார்க்க வைத்தவர்.
சி.ஐ.ஐ அமைப்பின் கெளரவத் தலைவர் ஆனார் பவன் முஞ்சால்!
அதேபோல 2022-23-ஆம் ஆண்டுக்கான சி.ஐ.ஐ. அமைப்பின் கெளரவத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைவரும், முதன்மை செயல் அதிகாரியுமான பவன் முஞ்சால். கடந்த 30 ஆண்டுகளாக சி.ஐ.ஐ அமைப்பில் பல்வேறு பதவிகளை வகித்தவர் இவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இவர், அடுத்த ஓராண்டு காலத்துக்கு இந்தப் பதவியில் இருப்பார்!