சென்னை: வேளச்சேரி அருகே கட்டப்பட்டுள்ள சென்னை மிக நீளமான மேடவாக்கம் மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் மேடவாக்கத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.95.21 கோடி மதிப்பீட்டில் தாம்பரம் – வேளச்சேரி இடையில் மேடவாக்கம் பகுதியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார்.
இந்த பாலமானது 2.03 கி.மீ. நீளமும், 11 மீ. அகலமும் கொண்டது. இந்த மேடவாக்கம் மேம்பாலம் சென்னையில் மிக நீளமான மேம்பாலம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாலம் திறக்கப்பட்டு உள்ளதால், அந்த பகுதியில் வெகுவாக போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.