இந்தியாவில் சிறந்த ஐடி நிறுவனங்கள் அடங்கிய இடங்களில் சென்னையும் ஒன்று. இங்கு 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் பல ஆயிரம் மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனடைந்து வருகின்றனர். இங்கு பல நூறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
எனினும் அவற்றில் இன்று சிறந்த பணிபுரியும் சூழல், ஊழியர்களின் விருப்பன், பிரெஷ்ஷர்களுக்கு அதிக வாய்ப்பளிக்கும் சிறந்த 15 நிறுவனங்களை பற்றித் தான் பார்க்க இருக்கிறோம்.
6 மாதத்தில் 1700% லாபம் கொடுத்த ஸ்மால் கேப் பங்கு.. நீங்க வாங்கி வைத்திருக்கீங்களா?
இதில் பல சர்வதேச ஐடி நிறுவனங்களும் இந்த லிஸ்டில் அடங்கும்.
கேப்ஜெமினி
சென்னையில் உள்ள சிறந்த ஐடி நிறுவனங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது கேப்ஜெமினி தான். இது டிஜிட்டல் பரிமாற்றத்தில் முன்னிலையில் இருக்கும் இந்த நிறுவனம், சர்வதேச அளவில் 8வது இடத்தில் உள்ளது. பணியாளர்களுக்கு ஏற்ற அதன் கொள்கைகள், குறிப்பாக சென்னையில் பிரெஷ்ஷர்களுக்கு வாய்ப்பளிக்கும் நிறுவனமாகவும் இந்த ஐடி நிறுவனம் உள்ளது.
காக்னிசண்ட்
காக்னிசண்ட் நிறுவனமும் சர்வதேச அளவில் முன்னணியில் இருக்கும் ஒரு ஐடி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் மொத்தம் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், அதில் 1,50,000 பேர் சென்னையில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிறுவனம் ஊழியர்கள் கற்றுக் கொள்ள வாய்ப்பளிக்கிறது.
டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ்
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பழமையான ஐடி நிறுவனங்களில் ஒன்று டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ். இது சர்வதேச அளவில் தனது சேவைகளை அளித்து வரும் ஒரு நிறுவனமாகும். குறிப்பாக சென்னையில் மிகப்பெரியளவில் தனது சேவையினை செய்து வருகின்றது. இது சென்னையில் சுமார் 65000 ஊழியர்களை கொண்டுள்ளது. இது பிரெஷ்ஷர்களுக்கு கற்றுக் கொள்ள சிறந்த இடமாகவும், குழுவாக இணைந்து பணியாற்றிவதிலும் சிறந்த இடமாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பிரெஷ்ஷர்களுக்கு மிக சிறந்த நிறுவனமாகவும் பார்கக்ப்படுகிறது.
ஜோஹோ
சென்னையினை தலையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஐடி நிறுவனம் தான் ஜோஹோ. 2022 நிலவரப்படி சுமார் 12,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட இந்த நிறுவனம் , பிரெஷ்ஷர்களுக்கு மிக சரியான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. அதோடு எல்லாவற்றுக்கும் மேலாக கற்றுக் கொள்ள சிறந்த இடமாகவும் பார்க்கப்படுகிறது.
யுஎஸ்டி குளோபல்
அடுத்த தலைமுறை டிஜிட்டல் கன்சல்டன்ஸி சேவையினை வழங்கி வருகின்றது. உலகத்தரம் வாய்ந்த கற்றல் என பல சாதகமான காரணிகளை கொண்டுள்ளது. பணிபுரிய நல்ல சூழலை கொண்டுள்ள இந்த நிறுவனம், ஊழியர்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக உள்ளது.
பிளின்ட்ரான் குளோபல் டெக்னாலஜிஸ்
சர்வதேச அளவில் தனது ஐடி சேவையினை வழங்கி வரும் ஐடி நிறுவனங்களில் பிளின்ட்ரான் குளோபல் டெக்னாலஜிஸஸ் -ம் ஒன்று. பல்வேறு மொபைல் இன்னோவேஷன் உள்ளிட்ட சிறந்த பல்வேறு தொழில் நுட்ப சேவைகளை வழங்கி வருகின்றது. இங்கு 500-க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட நிறுவனம். இதுவும் சென்னையை தலைமையிடமாக கொண்ட ஒரு நிறுவனமாகும்.
ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ்
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் என்பது, ஆட்டோமேஷனை தலைமையிலான ஐடி மற்றும் ஆலோசனை நிறுவனமாகும். இது புதுமையில் ஆட்டோமேஷன் மற்றும் ஆர்வமுள்ள ஊழியர்களை ஊக்குவிக்கிறது. இந்த நிறுவனம் பிரெஷ்ஷர்களுக்கு சரியான இடமாகவும் பார்க்ம்கப்படுகிறது.
ஆஸ்பயர் சிஸ்டம்ஸ்
சென்னையில் உள்ள ஊழியர்களுக்கு மிக விருப்பமான நிறுவனமாக இருக்கும் ஆஸ்பயர் சிஸ்டம்ஸ், ஊழியர்களுக்கு விருப்பமான ஒரு அலுவலகமாக பார்க்கப்படுகிறது. இது சென்னையில் 5000 வரையிலான ஊழியர்களை கொண்டுள்ளது. இதன் தலைமையிடம் சென்னையாகும்.
டெக் மகேந்திரா
அமெரிக்காவினை தலைமையிடமாக கொண்ட DXC டெக்னாலஜி நிறுவனம், இந்தியாவிலும் அதன் சேவையினை செய்து வருகின்றது. இது சென்னையில் 11,000 ஊழியர்களுக்கு மேல் கொண்டுள்ளது.
இது தவிர அல்ட்ரான், விருட்சா, ஸ்கோப் இண்டர் நேஷனல், டெக் மகேந்திரா, மைண்ட் ட்ரீ உள்ளிட்ட நறுவனங்களும் இந்த லிஸ்டில் அடங்கும்.
Do you know the top 15 IT companies in Chennai?
What are the top 15 IT companies in Chennai? What are its special features?