தாம்பரம் அருகே சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்தவர் பூபதி (40), இவருடன் 5 பேர் செஞ்சியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் செல்ல இண்டிகா காரில் தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது குரோம்பேட்டை ஜி.எஸ்.டி.சாலையில் வந்த போது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வரத் துவங்கியுள்ளது.
உடனடியாக சுதாரித்துக் கொண்ட பூபதி காரை சாலையில் ஓரமாக நிறுத்திவிட்டு காரில் இருந்த 5 பேரும் கீழே இறங்கி விட்டனர். இதனையடுத்து கார் மளமளவென தீப்பிடித்து எரிந்தது, இதையடுத்து தாம்பரத்தில் இருந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தினர்.
இதையடுத்து தீ விபத்திற்கான காரணம் குறித்து குரோம்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM